Google Layoffs:திரும்ப திரும்ப அடிக்கிறீங்களேடா! உலகளவில் தொடரும் பணி நீக்கம்; குண்டை தூக்கிப் போட்ட சுந்தர் பிச்சை!
Google Layoffs: டெக் ஜெயிண்ட் கூகுள் நிறுவனம் எதிர்காலத்தில் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெளிவாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, பல்வேறு நிறுவனங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கின. மைக்ரோசாஃப்ட், மெட்டா, டிவிட்டர், டிஸ்னி உள்ளிட்ட நிறுவனர்கள் தங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. மெகா பணி நீக்கம் காரணமாக லட்சக்கணக்கான நபர்கள் வேலையிழந்தனர். பெரு நிறுவனங்கள் பணி நீக்கம் செய்வது உலகளவில் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது.
இந்நிலையில், 'The Wall Street Journal' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுந்தர் பிச்சை பதிலளிக்கையில், ”கூகுள் நிறுவனம் வருங்காலத்தில் பணியாளார்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும், 20 சதவீதம் வேலையை திறன்மிக்கதாக மாற்ற முடிவு எடுத்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் செலவீனங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பணி நீக்க நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.