‛நீங்க எப்போ ஆஃபிஸ் வரனும் தெரியுமா?’ -கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய மின்னஞ்சல் !
Google Extends Work From Home: "WORK FROM HOME " மூலம் கூகுள் நிறுவனம் 7,300 கோடிக்கும் அதிகமான பணத்தினை மிச்சமாக்கி இருக்கிறது.
பிரபல கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் காலத்தை நீட்டித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரியும் வசதியை அறிமுகப்படுத்தின. ஆரம்பத்தில் சவாலாக பார்க்கப்பட்ட விஷயம் தற்பொழுது பரீட்சியமாகிவிட்டது. இந்நிலையில் கூகுள் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரியலாம் என்றும் ஜனவரி 10 தேதிக்கு பிறகு அலுவலக வருகை குறித்த வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்து ஊழியர்களுக்கு விளக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த தகவலும் இனி பயோ டேட்டாவில் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் "WORK FROM HOME " வசதியை தனது ஊழியர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. இதன் மூலம் தற்போது 7,300 கோடிக்கும் அதிகமான பணத்தினை மிச்சமாக்கி இருக்கிறது என அந்நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.மேலும் இதுவரையில் இல்லாத புதிய வழிமுறைகளையும் தனது கூகுள் பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். கூகுளின் 60 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்தோ அல்லது அலுவலகம் வந்தோ பணி செய்யலாம் என்றும், 20 சதவீத பணியாளர்கள் உலகின் ஏந்த ஒரு விருப்பப்பட்ட கிளை நிறுவங்களில் இருந்து பணி செய்யலாம் என்றும் அறிவித்தார். குறிப்பாக தனது 20% பணியாளர்கள் முழுவதுமாக வீட்டில் இருந்தே பணி செய்ய கூகுள் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. அதாவது சிலர் குழுவாக வேலை செய்யாலாம், சிலர் களத்தில் வேலை செய்யலாம் எனவே இந்த வழிமுறை இது அவரவர் பணி பொறுத்து மாறுபடும் எனவே அதன் அடிப்படையில் வேலை இடங்களை ஊழியர்கள் தேர்வு செய்துக்கொள்ள முடியும். இந்த வழிமுறை கூகுள் ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
WORK FROM HOME முறையில் பணி செய்யும் கூகுள் ஊழியர்களில் சிலர் , அலுவலக சூழலில் பணி செய்வதை விரும்புவதாவும். மேலும் சிலர் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து பணி செய்வதை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவேதான் அவர்களின் விருப்பத்தை கருத்தில்கொண்டு இவ்வகை வழிமுறைகள் வழங்கப்படிருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்வதால் கூகுளின் செலவினங்கள் குறைந்திருப்பதும் இந்த வழிக்காட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் கூகுளின் இந்த அறிவிப்பை நாட்டின் பல நிறுவன ஊழியர்கள் வரவேற்றுள்ளனர். இது போன்ற வழிமுறைகளை தங்கள் நிறுவனமும் செய்துக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.