Google New Announcement: கூகுள் நிறுவன ஊழியர்களிடம் சுந்தர் பிச்சை சொன்னது என்ன தெரியுமா?
WORK FROM HOME முறையில் பணி செய்யும் ஊழியர்கள் சிலர் , அலுவலக சூழலில் பணி செய்வதை விரும்புகின்றனர்.
தற்போதைய கொரோனா சூழலில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியார்களின் நலன் கருதி, அவர்கள் வீட்டில் இருந்து பணி செய்வதை ஊக்குவிக்கின்றன. இதில் சிறு நிறுவனங்கள் மட்டுமல்லாது ஆப்பிள், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களும் அடங்கும் .
ஆரம்ப காலக்கட்டத்தில் இது மிகப்பெரிய சவாலாக பார்க்கப்பட்டாலும், அதன் பிறகு நிறுவங்கள் இந்த முறை சார்ந்த பணிக்கு பழக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக கூகுள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் "WORK FROM HOME " வசதியை தனது ஊழியர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. இதன் மூலம் தற்போது 7,300 கோடிக்கும் அதிகமான பணத்தினை மிச்சமாகி இருக்கிறது என அந்நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் புதிய கலவைகளுடன் கூடிய வழிமுறைகளை கூகுள் பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கூகுளின் 60 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்தோ அல்லது அலுவலகம் வந்தோ பணி செய்யலாம் என்றும், 20 சதவீத பணியாளர்கள் உலகின் ஏந்த ஒரு விருப்பப்பட்ட கூகுளின் கிளை நிறுவங்களில் இருந்து பணி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்
குறிப்பாக கூகுள் நிறுவனம் தனது 20% பணியாளர்கள் முழுவதுமாக வீட்டில் இருந்தே பணி செய்ய அந்நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. அதாவது சிலர் குழுவாக வேலை செய்யாலாம், சிலர் களத்தில் வேலை செய்யலாம் எனவே இந்த வழிமுறை இது அவரவர் பணி பொறுத்து மாறுபடும். இந்த வழிமுறை கூகுள் ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
WORK FROM HOME முறையில் பணி செய்யும் ஊழியர்கள் சிலர் , அலுவலக சூழலில் பணி செய்வதை விரும்புகின்றனர். மேலும் சிலர் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து பணி செய்வதை விரும்புகின்றனர் அதனால்தான் அவர்களின் விருப்பத்தை கருத்தில்கொண்டு இவ்வகை வழிமுறைகளை வழங்கப்படிருப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்வதால் கூகுளின் செலவினங்கள் குறைந்திருக்கிறது. எனவேதான் கூகுள் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கூகுளின் இந்த அறிவிப்பை நாட்டின் பல நிறுவன ஊழியர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் இது போன்ற வழிமுறைகளை தங்கள் நிறுவனமும் செய்துக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.