Twitter on Facebook Meta: ’நாங்க இன்னும் மாறல’ - ஃபேஸ்புக்கை கலாய்த்த ட்விட்டர்!
நேற்று இரவு முதல், ’மெட்டா’ குறித்த பதிவுகள் வைரலாகி டிரெண்டாகின. இதனால், ட்விட்டரில் மெட்டா குறித்த பதிகளே குவிந்து வருகின்றது.
சமூக வலைதள நிறுவனங்களில் மிக பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ‛மெட்டா’ (Meta) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரிச்சுவல் உலகத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க். ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர்தான் மாற்றப்பட்டுள்ளதே தவிர, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மெசஞ்ர் ஆகிய அந்நிறுவனத்தின் செயலிகள் அதே பெயரிதான் தொடர்ந்து செயலப்டும் என மெட்டா நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு போட்டியான ட்விட்டர் நிறுவனம், ஃபேஸ்புக் பெயர் மாற்றத்தை சுட்டிக்காட்டி கேலி செய்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய பெயரை மாற்றுவது இது புதிதல்ல. ஏற்கனவே ‛தி ஃபேஸ்புக்’ என்றிருந்த பெயர் ஃபேஸ்புக் என மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில்தான் ஃபேஸ்புக் என்கிற பெயரும் தற்போது மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த பெயர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
Announcing @Meta — the Facebook company’s new name. Meta is helping to build the metaverse, a place where we’ll play and connect in 3D. Welcome to the next chapter of social connection. pic.twitter.com/ywSJPLsCoD
— Meta (@Meta) October 28, 2021
நேற்று இரவு முதல், ’மெட்டா’ குறித்த பதிவுகள் வைரலாகி டிரெண்டாகின. இதனால், ட்விட்டரில் மெட்டா குறித்த பதிகளே குவிந்து வருகின்றது. இந்த சூழலை சுட்டிக்காட்டி, பதிவிட்டுள்ள ட்விட்டர் நிறுவனம், “முக்கிய செய்தி: lol ஜே.கே இன்னும் ட்விட்டராகவே உள்ளது” என ட்வீட்டியுள்ளது. ஃபேஸ்புக் பெயர் மாற்றம் குறித்து ட்விட்டர் அபிமானிகளும் மீம்ஸ், கமெண்ட்ஸ்களை தெறிவிக்கவிட்டு வருகின்றனர்.
BIG NEWS lol jk still Twitter
— Twitter (@Twitter) October 28, 2021
the only #META we acknowledge is this:https://t.co/HalSMZt8L5
— Twitter Safety (@TwitterSafety) October 28, 2021
ஃபேஸ்புக்கில் ஒரு சம்பவம் என்றால் ட்விட்டர் கிண்டல் செய்வது இது முதல் முறை அல்ல. அவ்வப்போது, ஃபேஸ்புக் சர்வர் வேகம் குறையும்போது,ஃபேஸ்புக்கின் உண்மைதன்மை பற்றிய ட்ரால்கள் வரும்போது ட்விட்டர் எண்ட்ரி கொடுத்து கலாய்ப்பது வழக்கம்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்