மேலும் அறிய

Elon Musk vs Zuckerberg: புஸ்வானமான சண்டை... மார்க் ஜூக்கர்பெர்கை மீண்டும் சீண்டி பார்க்கும் எலான் மஸ்க்...!

பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்கை சிக்கன் எனக் கூறி வம்புக்கு இழுத்துள்ளார் எலான் மஸ்க்.

Elon Musk vs Zuckerberg: ஃபேஸ்புக்  நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்கை சிக்கன் எனக் கூறி வம்புக்கு இழுத்துள்ளார் எலான் மஸ்க்.

அலற விடும் எலான் மஸ்க்:

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகளை அடுத்தடுத்து பணியில் இருந்து நீக்கினார். 

பணம் கொடுத்து, ப்ளூ டிக் (verified) வாங்கும் வசதியை கொண்டு வந்தார். ட்விட்டரின் பெயரை x என மாற்றினார். இப்படி, இவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் உலக அளவில் பேசுபொருளாக மாறுவது வழக்கமாகிவிட்டது. அதேபோல, பிரபலங்களை வம்புக்கு இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ள எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மெட்டா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜுக்கர்பெர்க்கை தொடர்ந்து வம்புக்கு இழுத்து வந்தார்.

கூண்டு சண்டை:

அரசியல் தொடங்கி செயற்கை நுண்ணறிவு வரை பல விவகாரங்களில் இருவரும் நேர் எதிர் கருத்துகளை கொண்டுள்ளனர். இருவருக்கும் இடையேயான மோதலின் உச்சக்கட்டமாக, ஜுக்கர்பெர்க்குடன் கூண்டில் சண்டையிட தயார் என ட்விட்டரில் குறிப்பிட்டார்.

இதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி தந்த ஜுக்கர்பெர்க், "இடத்தை தேர்வு செய்து அனுப்பு" என குறிப்பிட்டிருந்தார். எலான் மஸ்க், ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு இடையேயான கூண்டு சண்டை தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து, சமூக வலைதளவாசிகள் உச்சக்கட்ட குஷியில் உள்ளனர். பெரும்பாலானா ட்விட்டர்வாசிகள், ஜுக்கர்பெர்கே வெற்றிபெறுவார் என கணித்து வருகின்றனர்.

புஸ்வானமான சண்டை:

இருவருக்கும் இடையேயான சண்டை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு ட்வீட் பதிவை போட்டுள்ளார். அதன்படி, ”எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவராக மஸ்க் இல்லை. அதனால் அதிலிருந்து நாள் வெளியேற வேண்டிய நேரம் இது. நான் அவருக்காக நேரம் ஒதுக்கினேன். ஆனால் எலான் மஸ்க் தேதியை உறுதி செய்யவில்லை. எலான் மஸ்க் சரியான தேதிப் பற்றி எப்போதாவது எலான் மஸ்க் தீவிரமாக எடுத்துக் கொண்டால், என்னை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவருக்கு தெரியும். இல்லையெனில், கடந்து செல்ல வேண்டியது தான். அனைத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நபர்களுடன் போட்டியிடுவதில் கவனம் செலுத்த போகிறேன்” என்றார் மார்க்.

இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க் மார்க் ஒரு சிக்கன் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த ட்விட்டானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget