Elon musk: ஏதாவது தள்ளுபடி பண்ணுவீங்களா..? ட்விட்டரிடம் கேட்ட எலான் மஸ்க்..! என்ன நடந்தது தெரியுமா..?
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க் ட்விட்டர் நிறுவனத்திடம் தள்ளுபடி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூக ஊடகமாக பார்க்கப்படுவது ‘ட்விட்டர்’ . மினி பிளாக் சைட் என அழைக்கப்படும் ட்விட்டர்தான் பல முக்கிய மற்றும் முன்னணி பிரபலங்களில் நம்பர் ஒன் சாய்ஸ். பெருகிவிட்ட சமூக வலைத்தளங்களில் எண்ணிக்கை ட்விட்டருக்கு கடந்த சில வருடங்களாக , சிக்கலை உண்டாக்கிவிட்டது. முன்பு இருந்த மாதிரியான நிலையில் தற்போது இல்லை .இந்த சூழலில்தான் உலக பணக்காரரும் , டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் ட்விட்டரை தான் வாங்கிக்கொள்வதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
முதலில் 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டரை வாங்கப்போகிறேன் என அறிவித்தவர். பின்னர் ட்விட்டரில் நிறைய போலிக்கணக்குகள் மற்றும் போலி தகவல்கள் உலா வருகின்றன. இதனால் 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது ட்விட்டருக்கு அதிகம் என கூறி தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் எலாம் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் பல கட்டமாக இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த சூழலில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி, ட்விட்டர் பங்கு ஒன்றை 54.20 டாலர்கள் வீதம் கையகப்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தை எலான் புதுப்பித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
Buying Twitter is an accelerant to creating X, the everything app
— Elon Musk (@elonmusk) October 4, 2022
இந்த நிலையில் அமெரிக்க நாளிதழ் ஒன்று , எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக , ட்விட்டரிடம் தள்ளுபடி கேட்டதாக செய்திகளை வெளியிட்டுள்ளது. 44 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 30 சதவிகிதம் தள்ளுபடி செய்யுமாறு எலான் மஸ்க் தரப்பினர் ட்விட்டரிடம் கேட்டிருக்கின்றனர். அதாவது 31 பில்லியன் அமெரிக்க டாலர் என்றால் நாங்கள் இப்போதே ட்விட்டரை வாங்க தயார் என்றிருக்கின்றனர்.
ஆனால் அதற்கு ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து 10 சதவிகிதமாவது குறையுங்களேன் என எலான் மஸ்க் தரப்பினர் ட்விட்டரிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதையும் ட்விட்டர் நிராகரித்துவிட்டது. இந்த நிலையில்தான் ட்விட்டரை வேறு வழியின்றி முதலில் சொன்ன விலைக்கே எலான் மஸ்க் வாங்கவுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் கூறும்பொழுது ட்விட்டரை இந்த விலைக்கு வாங்குவது , புதிதாக தான் உருவாக்கவுள்ள சூப்பர் செயலியாக “எவரித்திங் அப்ளிகேஷனுக்கு” உதவியாக இருக்கும் என்றார். எவரித்திங் ஆப் என்பது “வி சாட்’ போல அனைத்து சேவைகளும் ஒருங்கே அமைந்த ஒரு செயலி ஆகும்.