மேலும் அறிய

Twitter : மேசை முதல் காபி இயந்திரங்கள் வரை: ட்விட்டர் அலுவலக பொருட்கள் ஏலம்? என்னதான் நடக்குது?

மேசை முதல் காபி இயந்திரங்கள் வரை: ட்விட்டர் அலுவலக பொருட்களை ஏலம் விடப்படுகிறதா?

சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டிவிட்டர் தலைமை அலுவலகத்தில் உள்ள சில பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. 

டிவிட்டர் நிறுவனம் இயங்கிவரும் அலுவலகத்திற்கு வாடகை தரவில்லை என்பதால், அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk) மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் Bloomberg வெளியிட்டள்ள செய்தியில்  ’Heritage Global Partners Inc.' சார்பில் 27 மணிநேர ஏலம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் கார்ப்ரேட் அலுவகத்தில் உள்ள பொருட்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், மேசை உள்ளிட்டவைகள், 100 பெட்டிகளில் உள்ள KN95  முகமூடிகள் ஆகியவைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதோடு காபி தயாரிக்கும் மெசின்கள், எலக்ட்ரிக் பைக் சார்ஜிங் செய்யும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளும் ஏலம் விடப்பட்டுள்ளது.

இவைகளில் டிவிட்டரில் லோகோ இருக்கும். நியான் லோகோ 27,500 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் பறவை சிலை, 16 டாலர்கள் மதிப்புள்ளதாக இருக்கிறது. ட்விட்டர் பறவை பொம்மைகள், ஒரு ப்ரொஜெக்டர், ஐமேக் டிஸ்பிளே,  நாற்காலிகள், மற்றும் பிரிட்ஜ், பிட்சா மேக்கர் உள்ளிட்டவைகளும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.

வாடகை செலுத்தவில்லை:

ஹார்ட்ஃபோர்டு பில்டிங்கில் (Hartford Building) உள்ள 30 தளத்தில் டிவிட்டர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 16, ஆம் தேதி வாடகையை செலுத்துமாறு டிவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக கொலம்பியா ரெய்ட் (Columbia Reit) என்ற நிறுவனம் புகார் தெரிவித்திருப்பதில், டிவிட்டரின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கும் இன்னும் வாடகை செலுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. சான் பிரான்ஸ்சிஸ்கோ மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், டிவிட்டர் வாடகை செலுத்தாமல் இருப்பது இது முதல்முறை அல்ல என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

ப்ளூம்பர்கின் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வாடகைத் தொகையான 1,36,250 அமெரிக்க டாலரை 5 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும்  வாடகையை ட்விட்டர் நிறுவனம் வழங்காததால் வழக்கு தொடர்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை செலுத்தாது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், டிவிட்டர் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்த ஆதாரமோ, புள்ளி விவரங்களோ டிவிட்டர் சார்பில் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், இந்த ஏலத்திற்கும் டிவிட்டரின் நிதிநிலை உயர்வதற்கும் எந்த சம்பந்ததும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்:

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில், இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பினார் எலான் மஸ்க். அதைதொடர்ந்து, நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும்  தனிநபர்களுக்கு நீல நிற டிக் என,  மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தினார்.

டிவிட்டர் நிறுவனத்தின் செலவுகளை குறைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க.

Elon Musk: ”அய்யா மொதல்ல நீங்க கிளம்புங்க..” : எலான் மஸ்கிற்கு ஷாக் கொடுத்த டிவிட்டர் பயனர்கள்..

Governor RN Ravi: தமிழ்நாட்டின் பெயரை மாற்ற முயற்சியா? தமிழகம் எனக் குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் ரவி விளக்கம்

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget