Delete the App | உங்க ஸ்மார்ட்ஃபோன் பாதுகாப்பா இருக்கணுமா? அப்போ உடனே இந்த ஆப்பை டெலீட் பண்ணிடுங்க..
ஸ்மார்ட்போனில் தகவல்கள் திருடப்படாமல் இருக்க வேண்டும் என்றால், ரயில்நிலையம், ஒட்டல்கள், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபை வசதியைப் பயன்படுத்த வேண்டாம்.
ஸ்மாரட்போனைப் பாதுகாக்கும் செயலிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக கவனமாக இருக்க வேண்டும் எனவும், இல்லாவிடில் நீங்கள் பயன்படுத்தும் செயலிகள் உங்களது வங்கி தகவல்கள் உள்பட அனைத்தையும் திருட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
இன்றைய நவீன உலகத்தில் ஒரு மனிதர் நாளொன்று சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாகவும், ஒரு சிலர் 24 மணிநேரம் கூட தங்களது ஸ்மார்ட்போன்களில் நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் சில சமயங்களில் போன்களில் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தங்களுடைய விலைமதிக்கத்தக்க ஸ்மார்ட்போன்களை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க இரண்டடுக்கு பாதுகாப்பு முறைகளை பலர் பின்பற்றி வருகின்றனர். இதனால் மக்களின் வசதிக்காக பல செயலிகள் கூகுள் ஆன்ட்ராய்டு ப்ளே ஸ்டோரிலே கிடைக்கிறது. பல செயலிகள் இலவசமாகவும் கிடைக்கும் சூழலில், பலர் உடனே டவுன்லோடு செய்துப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
இந்த நடைமுறை தான் தற்போது பல சைபர் கிரைம் குற்றங்களுக்குக் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னதாக அவற்றின் நம்பகத்தன்மையை நாம் உறுதிப்படுத்துவதில்லை. கூகுளில் உள்ளது தானே என்ற நம்பிக்கையுடன் பயன்படுத்த தொடங்குகிறோம். இதனைப்பயன்படுத்தி பல செயலிகள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு தரவுகள் அனைத்தும் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
குறிப்பாக சமீபத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில், ப்ரேடோ (Praedo) என்ற இரண்டடுக்கு பாதுகாப்பு செயலி நுழைந்ததும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கு தரவுகள் கசிந்ததாக அதிர்ச்சித்தகவல் வெளியானது. இதனையடுத்து உடனடியாக இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம். ஓபன் சோர்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயலியில் வல்டர் எனும் மால்வேர் பேக்கேஜிலிருந்து இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இணைப்புகளின்றி நிறுவப்பட்டிருக்கும் இந்த தகவல் சாதனத்தில் இருக்கும் வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் திருடும் வல்லமைப்பெற்றுள்ளது. இது RAT வகை, அதாவது தீங்கிழைக்கும் ரிமோட் அக்சஸ் ட்ரோஜன் என்று பொருள்படும்.
எனவே உங்களது வங்கிக் கணக்கு உள்பட சுய விபரங்கள் திருடப்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்துள்ள செயலியை உடனடியாக நீக்க கூகுள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதோடு மட்டுமின்றி உங்களது ஸ்மோர்ட்போனுக்கு இரண்டடுக்கு அங்கீகாரப் பாதுகாப்பு தேவைப்பட்டால், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள பிரத்யேக கூகுள் ஆதெண்டிகேட்டர் (Google Authenticar) செயலியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உங்களது ஸ்மார்ட்போனில் தகவல்கள் திருடப்படாமல் இருக்க வேண்டும் என்றால், ரயில்நிலையம், ஒட்டல்கள், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைப் வசதியைப் பயன்படுத்தாதீர்கள். இதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் எனவும் வல்லுநர்கள் அறிவித்துள்ளது.