Clubhouse Android App | வாட்ஸ்ஆப்-க்கு அடுத்த சிக்கல்; களமிறங்குகிறது கிளப் ஹவுஸ்!
கிளப்ஹவுஸ் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு, இது வாட்ஸ்ஆபப் போல அல்லாமல் முழுக்க முழுக்க ஆடியோ உரையாடல் பரிமாற்றத்துக்கான அப்ளிகேஷன் இது. ஏற்கனவே நிபந்தனை விவகாரத்தில் சரிவை சந்தித்து வரும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இது போன்ற புதிய செயலிகளின் வரவு பின்னடைவை ஏற்படுத்தும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த அப்ளிகேஷன் குறித்துப் பதிவிட்டாலும் அதற்கடுத்த நிமிடமே அது பல மில்லியன் கணக்கில் டவுன்லோட் செய்யப்படும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். வாட்சப் தனிப்பயன் குறித்த சர்ச்சை எழுந்தபோது எலான் மஸ்க்தான் மக்களுக்கு ’சிக்னல்’ ஆப்பை அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்திய ஆப்தான் க்ள்ப்ஹவுஸ். அவர் அதுகுறித்து ட்வீட் செய்த அடுத்த நாளே சுமார் 8 மில்லியன் டவுன்லோட்களைச் சந்தித்தது அந்த அப்ளிகேஷன். இருந்தும் ஆப்பிள் ஃபோன் உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே இந்த அப்ளிகேஷன் என்பது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
மார்ச் 2020 இது சர்வதேச அளவில் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.களில் மட்டும் லாஞ்ச் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கும் ஒருவர் அழைப்பதன் வழியாக அல்லது காத்திருந்தோ இதில் நமது கணக்கைத் தொடங்கலாம்.
Dear everyone, everywhere: @Android is officially live across the globe!
— Clubhouse (@Clubhouse) May 21, 2021
❤️👋
இந்த நிலையில்தான் தற்போது இந்திய ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்காக கிளப்ஹவுஸ் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் நிறுவனமான ’ஆல்ஃபா எக்ஸ்ப்ளோரேஷன்’. இதை ஆண்ட்ராய்ட் 8.0 வெர்ஷன் உள்ள மொபைல் ஃபோன்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆண்ட்ராய்ட்டில் இயங்கினாலும் தொடக்கநிலை என்பதால் ஏற்கெனவே கிளப்ஹவுஸ் உபயோகிக்கும் பயனாளர்கள் அழைப்பின் வழியாக மட்டுமே இதில் கணக்கு தொடங்கலாம். அதன் வரை வெறுமனே தரவிறக்கு உங்கள் கணக்குக்காக முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.
கிளப்ஹவுஸின் வளர்ச்சியைக் கணக்கிட ஏதுவாகவே இந்த அழைப்பின் வழியான உபயோகம் இருக்கும், இருப்பினும் எதிர்காலத்தில் லட்சக்கணக்கான பயனாளர்களை இணைப்பதே தங்கள் நோக்கம், மேலும் மொழிவாரியாக விரிவடையும் திட்டமும் எதிர்காலச் செயல்பாட்டில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தனது ப்ளாக்கில் குறிப்பிட்டிருந்தார்.
கிளப்ஹவுஸ் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு, இது வாட்ஸ்ஆப் போல அல்லாமல் முழுக்க முழுக்க ஆடியோ உரையாடல் பரிமாற்றத்துக்கான அப்ளிகேஷன். மார்ச் 2020 இது சர்வதேச அளவில் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.களில் மட்டும் லாஞ்ச் செய்யப்பட்டது. ஏற்கேனவே இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கும் ஒருவர் அழைப்பதன் வழியாக அல்லது காத்திருந்தோ இதில் நமது கணக்கைத் தொடங்கலாம். இதற்கான அழைப்புகளை ஈ-பே தளத்தில் விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு வெளிநாடுகளில் இந்த அப்ளிகேஷன் பிரபலம். மார்க் சூக்கர்பெர்க், எலான் மஸ்க், என உலகின் பல டெக்னாலஜி பிரபலங்கள் இதில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இவர்கள் தவிர ஆஸ்டன் கட்சர், கெவின் ஹார்ட், ஓப்ரா வின்ஃப்ரே உள்ளிட்ட அமெரிக்கப் பிரபலங்களும் இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கின்றனர். இந்த் ஆடியோ அப்ளிகேஷனில் ஒரு அறையில் ஐந்தாயிரம் பேர் வரை உரையாடலாம். யாருடைய குரலை வேண்டுமானாலும் யாரும் கேட்கலாம். நமது ட்விட்டர் அக்கவுண்ட்டை இதனுடன் இணைத்துக்கொள்ளும் வசதி உள்ளது.