Bill Gates: பில்கேட்ஸ் பயன்படுத்தும் மொபைல்! இதுதான் விலை.. இதுதான் ஸ்பெஷல்.. அவரே பகிர்ந்த சீக்ரெட்!
இந்த வாரம் Reddit Ask Me Anything அமர்வில் இது குறித்து பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் மைக்ரோடாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். இத்தனை பெரிய வசதி படத்தவர் எந்த மொபைல்போனை பயன்படுத்துகிறார் என என்றைக்காவது நீங்கள் யோசித்தது உண்டா! ஆனால் அவரே அதனை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
மிகப்பெரிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் என்ன ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை வைத்திருப்பார் என நினைக்க வேண்டாம் . ஏனென்றால் அவரே பலமுறை தான் ஆண்ட்ராய்ட் மொபைலைத்தான் பயன்படுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார். பொது மேடைகளில் அவர் மொபைல் பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது , அது மடித்து வைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்பது நமக்கு தெரியும். இதுவரையில் நம்மில் பலர் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டியோ என நினைத்திருப்போம் ஆனால் அதுதான் இல்லை. அவர் சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான Samsung Galaxy Z Fold 3. மொபைலைத்தான் பயன்படுத்துகிறார். 9to5Google வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த வாரம் Reddit Ask Me Anything அமர்வில் இது குறித்து பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
தான் Samsung Galaxy Z Fold 3 மொபைலை பயன்படுத்துவதாகவும் , இந்த திரையில் நான் ஒரு சிறந்த போர்ட்டபிள் பிசி மற்றும் ஃபோன் இரண்டையுமே பயன்படுத்த முடியும் . அதுதான் இதனை பயன்படுத்த காரணம் என தெரிவித்துள்ளார். தான் பயன்படுத்தும் மொபைல்போன் குறித்து பில்கேட்ஸ் பகிர்ந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்க்கது. மைக்ரோசாஃப்ட் மற்றும் சாம்சங் இரண்டும் தொழில்நுட்ப களத்தில் நெருங்கிய கூட்டாளிகள் என்பது நாம் அறிந்ததுதான். அதனால் பில் கேட்ஸ் Samsung Galaxy Z Fold 3 மொபைலை பயன்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை. இதன் விலை இந்திய மதிப்பில் 1,57,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் இடையே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போது கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேட்டட் வெர்சன் வந்த பிறகு பில்கேட்ஸ் அதனை பயன்படுத்த தொடங்கினாலும் தொடங்குவார்!