EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION
’’ஐயா வராரு எல்லாம் பெர்ஃபெக்ட் ஆ இருக்கணும்’’ என்கிற தொனியில் அமைச்சர் எ.வ.வேலு திமுக நிர்வாகிகளுக்கு அலர்ட் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில்,அரங்க ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வருகின்ற 14ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கி சேலம் மாவட்டம் வரை 47 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் மிக பிரமாண்டமான அரங்குகள் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு மேடை மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும், முதல்வர் வரும்போது எவ்வித இடையூறுகளும் இருக்கக் கூடாது அவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
விழா மேடையில் வைப்பதற்காக பிரம்மாண்ட பேனர்கள், கட் அவுட்கள் எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் சரக டிஐஜி தர்மராஜ், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்...























