மேலும் அறிய

Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

வியூகமே இல்லாமல் தேர்தல் பொறுப்பு கொடுத்தால் என்ன செய்ய முடியும் என ஆர்எஸ்எஸ் மீட்டிங்கில் அண்ணாமலை வெளிப்படையாகவே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை சரிகட்ட முக்கிய பதவி ஒன்றை கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.

சிங்காநல்லுார், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலையை அறிவித்தார் நயினார் நாகேந்திரன். ஆனால் தனது தந்தையின் உடல்நலத்தை காரணம் காட்டி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அண்ணாமலை. இது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 6 தொகுதிகள் மட்டுமே கொடுத்ததால் தான் அதிருப்தியில் அண்ணாமலை பதவியை தூக்கியெறிந்ததாக விமர்சனம் வலம்வந்தது. சட்டப்பேரவை தேர்தலிலும் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி வந்தது.

இந்தநிலையில் தமிழ்நாடு வந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. அங்கும் அண்ணாமலை விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என முடித்து வைத்தார் பி.எல்.சந்தோஷ்.

அதற்கு பதிலாக RSS தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார். அண்ணாமலை உள்ளிட்ட 13 பேரை மட்டும் வரவைத்து RSS நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பதவியில் இருந்து விலகியது தொடர்பாக விளக்கம் கேட்டதற்கு, அண்ணாமலை உடனே வியூகத்தை சொல்லுங்கள், திமுகவை வீழ்த்துவதற்கு எந்த வியூகமும் இல்லாமல் எப்படி களத்தில் சென்று தேர்தல் பணியாற்ற முடியும் என கேட்டதாக தெரிகிறது. எந்த ஒரு ப்ளானும் இல்லாமல் எந்த அடிப்படையில் தனக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியதாக சொல்கின்றனர். 6 தொகுதிகள் ஒதுக்கியதால் தான் அதிருப்தியில் அண்ணாமலை விலகியதாக பேச்சு அடிபட்ட நிலையில், எண்ணிக்கை முக்கியமில்லை, வியூகத்தை தெளிவாக சொன்னால் ஒரு தொகுதியில் கூட தேர்தல் பணியாற்ற தயார் என அண்ணாமலை சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக பாஜகவின் வாக்கு சதவீதம் வளர்ச்சிக்கு அண்ணாமலையும் காரணம் என்பதால் 2026 தேர்தலிலும் அண்ணாமலையை பயன்படுத்த வேண்டும் என பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. கூட்டணிக்கும் பிரச்னை வராமல் உட்கட்சியிலும் பஞ்சாயத்து வராமல் அண்ணாமலைக்கு பதவி கொடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அண்ணாமலைக்கு சக்தி கேந்திராவின் தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சி இரண்டாக பிரிந்து மோதிக் கொள்ளாமல் இருக்க அண்ணாமலைக்கு விரைவில் பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.

தமிழ்நாடு வீடியோக்கள்

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget