மேலும் அறிய

BL Santhosh | "பேட்டி கொடுத்தா போதுமா" சீனியர்களுக்கு விழுந்த டோஸ், B.L.சந்தோஷ் வார்னிங் | NDA | BJP

பேட்டி கொடுக்குறது மட்டும்தான் உங்க வேலையா என தமிழக பாஜகவினரிடம் பி.எல்.சந்தோஷ் கறாராக பேசியதாக சொல்கின்றனர். தொகுதி பங்கீடோடு சேர்த்து அண்ணாமலை விவகாரத்தையும் நிர்வாகிகள் இழுத்த நிலையில் முக்கியமான ஆர்டர் ஒன்றை போட்டுள்ளார் பி.எல்.சந்தோஷ்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்டமாக சீட் ஷேரிங் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் இடம்பெற்றிருக்கும் கட்சிகள், இடம்பெறப்போகின்ற கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு முதல்முறையாக 4 இடங்களில் வென்ற பாஜக, இம்முறை அதைவிடவும் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேற்று தமிழகம் வந்து தொகுதிப் பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டர். சென்னையில் நாடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் பேசிய பி.எல்.சந்தோஷ் தமிழக பாஜகவினரை லெஃப்ட் அண்ட் ரைட்டு வாங்கியதாக சொல்கின்றனர். பேட்டி கொடுப்பது உங்கள் வேலை கிடையாது, பேட்டி கொடுத்தால் மட்டும் போதுமா, தேர்தல் பணிகளையும் களத்தில் இறங்கி தீவிரமாக பார்க்க வேண்டும் என்று கறாராக சொன்னதாக தெரிகிறது. அதேபோல் சீனியர்கள் தங்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் ஈகோவை மூட்டைகட்டி வைத்துவிட்டுஅந்தந்த தொகுதி நிர்வாகிகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

 அதுமட்டுமல்லாமல், கடந்த லோக் சபா தேர்தலில் பெற்ற 11 சதவிகித வாக்குகளை முன்வைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இடமடங்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்கவிருப்பதாகவும், அதற்கேற்றவாறு பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் தொகுதிகளை ஆய்வு செய்து லிஸ்ட் ஒன்றை தயார் செய்யுமாறு பி.எல்.சந்தோஷ் ஆர்டர் போட்டிருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 

அதேபோல் தேர்தல் பணி பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியதை பற்றிய பேச்சும் இந்த கூட்டத்தில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் நடவடிக்கையால் கூட்டணிக்குள்ளும் கட்சிக்குள்ளும் சிக்கல் வர வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்கின்றனர். ஆனால் இதையெல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என பி.எல்.சந்தோஷ் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

பி.எல்.சந்தோஷ் தலைமையிலான கூட்டத்தில் பேசப்பட்ட வாதங்களை வைத்தும் பார்க்கையில், சட்டமன்றத் தேர்தலில் சுமார் 20 சதவிகித தொகுதிகளைக் கூட்டணியில் கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. தவெகவை விளாசிய சீமான்!
CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. தவெகவை விளாசிய சீமான்!
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு செய்த மாபெரும் புரட்சி!
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு புரட்சி!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget