கூகுளை எச்சரித்த ஆப்பிள்! - என்ன நடந்தது?
அப்ளிகேசன் நிறுவனங்கள் எந்த தகவல்களை வேண்டுமானாலும் சேகரியுங்கள் ஆனால் அதனை பயனாளர்களிடம் இருந்து கேட்டு பெறுங்கள்- ஆப்பிள்
கடந்த மாதம் பிரபல ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதில் " அப்ளிகேசன் நிறுவனங்கள் எந்த தகவல்களை வேண்டுமானாலும் சேகரியுங்கள் ஆனால் அதனை பயனாளர்களிடம் இருந்து கேட்டு பெறுங்கள்" என்று காட்டமாக தெரிவித்திருந்தது . மேலும் அந்த கோட்பாட்டிற்குள் வராத எந்த ஒரு செயலியையும் நாங்கள் ஐஓஎஸ் இல் இருந்து நீக்க வேண்டி வரும் எனவும் சாடியிருந்தது. அதன் பிறகு பல செயலி நிறுவனங்களும் தங்களது செயலி பதிப்பில் மாற்றங்களை கொண்டு வந்தன. ஆனால் இந்த அறிவிப்பு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு முற்றிலும் முரணானது என்றாலும் ஆப்பிள் நிறுவத்தின் அறிவிப்பிற்கு உட்பட்டு ஃபேஸ்புக் தாங்களும் மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தங்களின் நிலைப்பாட்டினை வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்திருந்தது.
பயனாளர் தனியுரிமையை பாதுகாப்பதில் எப்பொழுதும் ஆப்பிள் நிறுவனம் முன்னோடியாக திகழக்கூடியது. ஆனால் ஃபேஸ்புக்கோ பயனாளர்களின் தகவல்களை அனுமதியின்றி திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
குறிப்பாக தனிமனித தேர்வினை அடிப்படையாக வைத்து அதன் விளம்பரங்களை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு வழங்கும். உதாரணமாக ஃபிள்ப்கார்ட்டில் ஒரு பொருளை நாம் தேடும் பொழுது அது ஃபேஸ்புக் suggestion இல் விளம்பரமாக வரும். இதே நிலையைத்தான் தற்போது வாட்ஸ் அப்பிலும் அந்த நிறுவனம் புகுத்த முயற்ச்சித்து வருகிறது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் விதிமுறைகளை ஏற்று, தனது புதிய பதிப்பில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது . அதில் பயனாளர்களை பின்தொடர ஃபேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அது சிறிய விளம்பரங்களை நம்பியிருக்கும் பயனாளர்களுக்கு அது உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. மிக முக்கியமாக " help keep facebook free of charge " என தெரிவித்துள்ளது. அதாவது ஃபேஸ்புக்கினை கட்டணமில்லா சேவையாக தொடங்க உதவுங்கள் என கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த அறிவிப்பின் மூலம் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடிதான் சேவையை இலவசமாக வழங்கியதா என்றும், பயனாளர்கள் அனுமதிக்கவில்லை எனில் ஃபேஸ்புக் எதிர்காலத்தில் கட்டண சேவையாக மாறுமா என்ற கேள்விவும் எழுந்துள்ளது. உலகின் முக்கிய இரு நிறுவனங்களின் இந்த அறிக்கைகள் மூலம் அவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் ஒருவிதமான சந்தேகம் எழுந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது.
ஆப்பிள் உபயோகிப்பாளர்களும், ஆண்ராய்டு உபயோகிப்பாளர்களும் சரிசமமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அந்த இரு பயன்பாட்டையும் வழங்கி வரும் முக்கிய நிறுவனங்களின் இந்த மோதல் , சேவையில் ஏதேனும் மாற்றத்தை தருமா? என்கிற எதிர்பார்ப்பும் பயனாளர்களிடம் உள்ளது. அதே நேரத்தில் பயனர்களின் பாதுகாப்பில் எப்போதும் போல ஆப்பிள் நிறுவனம் உறுதியாக இருப்பதால், அதவ் பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.