மேலும் அறிய

5G: ஆப்பிள் வாடிக்கையாளரா நீங்க ? அப்போ ஒரு குட் நியூஸ் உங்களுக்கு.. நிறுவனம் வெளியிட்ட தகவல்

இந்தியாவில் 5G நெட்வொர்க்கிற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மென்பொருள் மேம்படுத்தல்களை (software update) ஆப்பிள் தனது பயனர்களுக்கு அடுத்த வாரம் முதல் வெளியிடும்.

இந்தியாவில் 5G நெட்வொர்க்கிற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மென்பொருள் மேம்படுத்தல்களை (software update) ஆப்பிள் தனது பயனர்களுக்கு அடுத்த வாரம் முதல் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் அதன் iOS 16 பீட்டா மென்பொருள் புதுப்பிப்பை வெளியிடும் போது இந்த சேவை கிடைக்கும். ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் iPhone 14, iPhone 13, iPhone 12 மற்றும் iPhone SE (3வது தலைமுறை) மாடல்களில் ஆப்பிளின் பீட்டா மென்பொருள் திட்டத்தைப் பயன்படுத்தி 5G சேவையை பெற முடியும்.

ஆப்பிள் பீட்டா மென்பொருள் திட்டமானது  தகுந்த  ஆப்பிள் ஐடியைக் கொண்டவர்கள்,  ஆப்பிள் பீட்டா மென்பொருள் பயன்படுத்தலாம். ஆப்பிள் பீட்டா மென்பொருள் திட்ட பயனர்கள் அந்த மென்பொருள் அதிகாரபூர்வமாக வெளிவரும் முன்னே அதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். Apple features பயன்பாட்டை கண்டறிய அந்த நிறுவனம் பயனாளர்களை அழைத்து நிறை குறைகளை  கேட்டறிந்து அதற்கேற்றவாறு வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Apple Beta மென்பொருள் நிரலை அணுக, iPhone பயனர்கள் Airtel மற்றும் Jioவில் இருக்கும்  பொது பீட்டாக்களையும், அடுத்த வாரம் கிடைக்கும் 5G பீட்டா உள்ளிட்ட அடுத்தடுத்த updates கொடுத்து பெறலாம்.  ஆப்பிள் பீட்டா மென்பொருள் திட்டத்தின் உறுப்பினராக இருந்தால்  iPhone, iPad, Mac, Apple TV, HomePod mini அல்லது Apple Watchல் பதிவுசெய்து, அணுக முடியும். ஐபோன் பயனர்களுக்கு நிரல் மற்றும் மென்பொருள் (program and software) இரண்டும் இலவசம் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தன்னார்வமானது மற்றும் பங்கேற்பதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

இந்தியாவில் அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி சேவையை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக அக்டோபரில், ஆப்பிள் நிறுவன அறிக்கையில், "நெட்வொர்க் சரிபார்ப்பு மற்றும் தரம் மற்றும் செயல்திறனுக்கான சோதனை முடிந்தவுடன், ஐபோன் பயனர்களுக்கு சிறந்த 5G அனுபவத்தை வழங்க, இந்தியாவில் உள்ள எங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 5G மென்பொருள் டிசம்பரில் ஐபோன் பயனர்களுக்கு பயண்பாட்டிற்க்கு வெளிவரத் தொடங்கும் " என்று கூறியிருந்தது.

 ஐபோன் தயாரிப்பாளரின் இந்த நடவடிக்கையானது தொலைத்தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை 5G தொடர்பான மென்பொருளைப் புதுப்பிப்பதற்கும், தேவையான உள்கட்டமைப்பை விரைவாக வெளியிடுவதற்கும் அறிவித்த  பின்னர் வந்துள்ளது.  அக்டோபர் 1ம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய மொபைல் கூட்டமைப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். 

2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கம் தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்களுக்கு  அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியது. அக்டோபரில், பார்தி ஏர்டெல் நிறுவனம் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய எட்டு நகரங்களில் "ஏர்டெல் 5ஜி பிளஸ்" சேவையை அறிமுகப்படுத்தியதாகவும், 2023 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதையும் உள்ளடக்கும் என்றும் கூறியிருந்தது. 

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான IDC இன் கூற்றுப்படி, 2020 முதல் 2022 முதல் பாதி வரை 5.1 கோடி 5G ஸ்மார்ட்போன்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் அவை 2023 ஆம் ஆண்டில் 50 சதவீத சந்தைப் பங்கைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பல முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு தீபாவளிக்குள் அதிவேக 5G தொலைத்தொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்துவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்கள், தாலுகாக்களில் 5G நெட்வொர்க்கை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

 "Samsung... 5Gயில் 27 மாடல்கள் இருப்பதாகவும். 16 மாடல்கள் ஏற்கனவே தயாராக உள்ளன மற்றும் இயக்கப்பட்டுள்ளன. மீதம் நவம்பர் 10-12க்குள் தயார்செய்யப்படும். OnePlus அனைத்து 17 மாடல்களும், Vivo அனைத்து 34 மாடல்களும், Realme அனைத்து 34 மாடல்களும் எங்கள் நெட்வொர்க்கில் வேலை செய்யும். Xiaomiயின் அனைத்து 33 மாடல்களும், Oppo அனைத்து 14 மாடல்களும் வேலை செய்யும். ஆப்பிள் நிறுவனத்திடம் 13 மாடல்கள் உள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் (மென்பொருள் புதுப்பிப்பு) வெளியிடப்படும், டிசம்பர் நடுப்பகுதியில் அவை அனைத்தும் தயாராக இருக்க வேண்டும்" என்று பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget