மேலும் அறிய

iOS16 WWDC2022: ஐஓஎஸ்16 இல் இவ்வளவு வசதிகள் வர போகுதா? முன்னோட்ட வீடியோவை வெளியிட்ட Apple நிறுவம்!

பகிரப்பட்ட புகைப்படங்களை நீங்கள் இணைத்த குடும்ப உறுப்பினர்கள் டவுண்லோட் செய்யவோ, ஷேர் செய்யவோ , எடிட் செய்யவோ முடியும் .

பிரபல ஆப்பிள் நிறுவனம் தனது WWDC (Apple Worldwide Developers Conference) 2022 ஐ தற்போது துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனது புதிய படைப்புகள் குறித்த அப்டேட்ஸை  இந்த மாநாடின் பொழுது ஆப்பிள் அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ள iOS 16 இல் என்ன வசதிகள் இடம்பெறவுள்ளது என்பது  குறித்த முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.  

புதிய லாக் திரை :

 iOS 16 இல் புதிய lock screen வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆப்பிள் இதனை மிகப்பெரிய புதுப்பித்தல் வசதி என அழைக்கிறது. ஐஓஎஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக   lock screen இல் மாற்றம் கொண்டுவருவது இதுவே முதல்முறையாகும்.  பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி ஸ்கிரீனை மாற்றிக்கொள்ள முடியும் . குறிப்பாக  காலண்டர், ஃபிட்னஸ் டிராக்கிங் போன்ற widgets ஐ சேர்த்துக்கொள்ளலாம். லாக் ஸ்கிரீனுடன் சேர்த்து Focus mode -லும் புதிய அப்டேட்ஸை எதிர்பார்க்கலாம். Focus mode வசதிக்கு ஏற்ப லாக் ஸ்கிரீனை மாற்றிக்கொள்ள முடியும்.

iMessage  :

பயனாளர்கள் ஐஓஎஸ் 16 இல் இம்முறை edit மற்றும் undo  வசதிகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல படிக்காத  செய்திகளை எளிமையாக மார்க் செய்யும் வசதி , SharePlay வசதி உள்ளிட்டவை iMessage-க்கு வருகிறது.

Family Sharing வசதியில் மாற்றங்கள் :

iOS 16 ஆனது குழந்தைகள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் parental control வசதியை எளிமையாக்குகிறது. ஒரு குழந்தை கூடுதல் திரை நேரத்தைக் கேட்டால் பெற்றோர்கள் மெசேஜிலேயே  அவர்கள் கூடுதல் நேரம் மொபைலை பயன்படுத்த அனுமதிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

iCloud பகிரப்பட்ட Photo Library :

ஐபோன் பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் iCloud இல் பகிரப்பட்ட  Photo Library ஐ ஷேர் செய்துக்கொள்ளலாம். முதற்கட்டமாக 5 உறுப்பினர்கள் மட்டுமே இணைய முடியும்.  பயனாளர்கள் ஏற்கனவே கேலரியில் உள்ள புகைப்படங்களைப் பகிரலாம் அல்லது  தேதி , புகைப்படங்களில் உள்ளவர்களின் அடிப்படையிலும் கூட பகிர்ந்துக்கொள்ள முடியும். பகிரப்பட்ட புகைப்படங்களை நீங்கள் இணைத்த குடும்ப உறுப்பினர்கள் டவுண்லோட் செய்யவோ, ஷேர் செய்யவோ , எடிட் செய்யவோ முடியும். குடும்ப உறுப்பினர்களின் முக அடையாளத்தின் அடிப்படையில் பயனாளருடனான மெமரிக்கள் தானாக ஷேர் செய்யப்படும் .

பாதுகாப்பு சோதனை :

Safety Check வசதியானது லொக்கேஷன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வசதிகளை மற்றவர்களுடன் ஷேர் செய்வதற்கான கட்டுப்பாடுகளை வழங்குகிறது. தனிப்பட்ட பாதுகாப்பினை விரும்பும் பயனாளர்களுக்கு இது சிறப்பானதாக இருக்கும் என கருதப்படுகிறது. பயனர்கள் தங்கள் மற்ற எல்லாச் சாதனங்களிலும் iCloud இலிருந்து எளிதாக வெளியேறவும், தனியுரிமை அனுமதிகளை மீட்டமைக்கவும், தங்கள் கையில் உள்ள சாதனத்திற்கு மட்டுமே செய்தி அனுப்புவதைக் கட்டுப்படுத்தவும் உதவும் அவசரகால மீட்டமைப்பு வசதியும் இடம்பெறவுள்ளது.

Home app:

ஐஓஎஸ் 16 ஆனது ஹோம் ஆப்பில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளது..climate, lights, security  போன்ற பல வசதிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

புதிய டிக்டேஷன் வசதி :

புதிய டிக்டேஷன் அம்சம் பயனர்கள் குரல் மற்றும் தொடுதலுக்கு இடையே திரவமாக நகர அனுமதிக்கும். நீங்கள் இதிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Embed widget