ஐபோன் 12ல் இப்படி ஒரு பிரச்னையா? சரி செய்து தருவதாக சொல்லும் ஆப்பிள் - விவரம்!
ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ மொபைல் போன்களில் வரும் ஆடியோ பிரச்சனைகளை இலவசமாக சரி செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பிரிமியம் மொபைல் ஃபோன் நிறுவனமான ஆப்பிளின் கடைசி ரிலீசான ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோவில், ஆடியோ பிரச்சனைகள் வருவதாக அதிக அளவில் புகார்கள் வந்தன. அதிக செக்யூரிட்டி தன்மையும், தரவுகள் வெளிவராமல் இருக்கும் ப்ரைவசி தன்மையும் நிறைந்ததாக வர்ணிக்கப்படும் ஐபோன், பெரிதாக பிரசுச்னைகளும் வராமல் இருக்குமென்ற பரவலான நம்பிக்கை உள்ளது. அப்படிப்பட்ட நிறுவனத்தின் வெற்றிகரமாக விற்பனையில் இருக்கும் ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ மொபைகளில் ஆடியோ பிரச்சனைகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ மொபைல் போன்கள் சிலவற்றில் ஆடியோ பிரச்சனைகள் வருவதாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது மட்டுமின்றி அனைத்திற்கும் இலவசாமக சர்விஸ் செய்து தருவதாக ஐபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
சில ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ சாதனங்கள் தங்கள் ஆடியோவில் சிக்கல்களை எதிர்கொண்டதை ஆப்பிள் ஒப்புக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை சரி செய்ய தயாராக இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கூறுவது, "மிகச் சிறிய அளவிலான மொபைல் ஃபோன்களில் மட்டுமே இந்த பாதிப்புகள் வந்துள்ளன. அக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட மொபைல் ஃபோன்கள்தான் இந்த பிரச்சனைக்கு உள்ளாகின்றன. ரிசீவர் மாட்யூலில் உள்ள ஒரு காம்பொனன்ட்டில் குறைபாடு இருப்பதாக ஆப்பிள் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான சர்விஸை இலவசமாக செய்துதர முன்வந்துளோம் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது, மேலும் இந்த பிரச்சனைகள் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸில் வருவதில்லை, அதன் பயன்பாட்டாளர்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
எதேனும் ஆப்பிள் ஐபோன் 12 அல்லது 12 ப்ரோ மொபைல் போன்களில் கால் பேசும்போது ஆடியோ பிரச்சனைகள் இருந்தால் அருகிலுள்ள ஆப்பிள் சர்விஸ் சென்டரை அணுகி சரி செய்துகொள்ளலாம்.
"உங்கள் ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 ப்ரோ மொபைல் ஃபோன் அழைப்புகளை மேற்கொள்ளும் போதோ, அழைப்புகளை பெரும்போதோ ரிசீவரில் இருந்து ஒலியை வெளியிடவில்லை என்றால், அது இந்த இலவச சர்விஸுக்கு தகுதியுடைய மொபைல் ஃபோனாக இருக்கும்" என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த குபெர்டினோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தம்ஸ்து புதிய ஐபோன்களில் அது கடைகளுக்கு விற்பனைக்கு செல்லும் முன்பே சிக்கலை சரி செய்து அனுப்புகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய மாடல் ஐபோன் 12 இன் அதே அடிப்படை வடிவமைப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும், ஆனால் மேம்பட்ட கேமரா திறன்கள் மற்றும் பிற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று டெக் அறிஞர்கள் கூறியுள்ளனர்.