Crater Nasa : செவ்வாய் கிரகத்தில் பெரிய பள்ளம்.. நாசா வெளியிட்ட திகைக்கவைக்கும் புகைப்படம்..
அந்த புகைப்படத்துக்கு, “The Martian crater marks the spot,” என கேப்ஷன் கொடுத்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா, செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தைக் கண்டறிந்துள்ளது. இதன் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு, “The Martian crater marks the spot,” என கேப்ஷன் கொடுத்துள்ளனர்.
High Resolution இமேஜிங் சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பள்ளத்தை நாசா படம் பிடித்ததாக குறிப்பிட்டுள்ளது. அந்த பதிவில், செவ்வாய் கிரகத்தில் புதிதாக சீரோ லாங்கிடுயூட்டை பார்க்கிறீர்கள். இது ரெட் பிளானட்ட்டின் கிரீன்விச் ஆய்வகத்திற்கு சமமானதாகும் என குறிப்பிட்டுள்ளது.
View this post on Instagram
நாசா குறிப்பிட்டுள்ள கிரீன்விச் ஆய்வகம், லண்டனில் ஒரு உயரமான மலையின் மீது உள்ளது. இது பூமியின் பிரதான மெரிடியனைக் குறிக்கிறது. இது பூமியை இணைக்கும் வடக்கு மற்றும் தெற்கு கோடு ஆகும். மேலும் இது கிழக்கு மேற்கு எங்கு சந்திக்கிறது என்பதையும் வரையறுக்கிறது. மேலும், வானியல் ஆய்வுகளுக்கான சீரோ ரெஃபரன்ஸாகவும் இந்த கோடு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் மார்ஸுக்கு அனுப்பப்பட்ட ரோவர் ஒன்று அண்மையில் அதிக அளவில் அங்கிருந்து தூசுகளை எடுத்துவந்து சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram