Milky Way Galaxy: நம்முடைய கேலக்ஸியில் 70 புதிய சிறிய கோள்களா? கண்டுபிடிப்பு சொல்வது என்ன?
நம்முடைய மில்கிவே கேலக்ஸியில் புதியதாக சில கோள்களை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளியில் எப்போதும் வானியலாளர்கள் ஆராய்ச்சியில் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை கண்டறிவது வழக்கம். அந்த கண்டுபிடிப்புகளை பற்றி நாம் அறியும் போது அது நமக்கு பெரியளவில் ஆச்சரியத்தை தரும். அந்தவகையில் தற்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு நம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படி அவர்கள் கண்டுபிடித்த சுவாராஸ்யமான புதிய விஷயம் என்ன தெரியுமா?
ஒரு வானியலாளர்களின் குழு தற்போது நம்முடைய மில்கிவே கெலக்ஸியில் 70 புதிய கோள்களை கண்டறிந்துள்ளனர். இந்த புதிய கோள்கள் அனைத்தும் எந்த ஒரு நட்சத்திர கோள்களையும் சுற்றாமல் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் தனியாக நம்முடைய கெலக்ஸியில் சுற்றி வருகின்றதாவது அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவை அனைத்தும் மிகவும் சிறியதாக உள்ள சில வாயுகள் மற்றும் தூசிகளின் மூலம் சிறிய கோள்களாக உருவெடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த கோள்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்த வானியலாளர் ஒருவர், “இது போன்று பல கோள்கள் இருக்க வாய்ப்பு உள்ளன. இவற்றை பார்த்து ஆச்சரியம் அடையவா அல்லது மேலும் பல இருக்கும் என்று நினைத்து அதிரச்சி அடையவா என்பதில் குழப்பமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கோள்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் அவற்றை கண்டறிவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் இதை கண்டறிய அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த புதிய தொலை நோக்கியை பயன்படுத்தியுள்ளனர். இந்த புதிய கோள்கள் அனைத்தும் வியாழன் கோளின் நட்சத்திரங்கள் உருவாகும் இடத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவற்றை கண்டறிய வானியலாளர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தரவுகள் மற்றும் படங்கள் ஆகியவற்றையும் சேர்த்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் மேலும் பல லட்சம் சிறிய கோள்கள் இதுபோன்று இருக்கலாம். அவை அனைத்தும் நம்முடைய மில்கிவே கேலக்ஸியில் ஃப்ரீயாக சுற்றுலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க..
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:இனிமே ஆடியோ மெசேஜுக்கு ப்ரிவ்யூ.. Whatsapp அறிவித்த சூப்பர் அப்டேட்..