5G Vs 4G என்ன வித்தியாசம்? 5G மொபைல் நெட்வொர்க்கில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

மத்திய அரசு 5ஜி தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள எம்டிஎன்எல், ரிலயன்ஸ் ஜியோ, வோடோஃபோன் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு நேற்று அனுமதி அளித்தது.

டிஜிட்டல் உலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 5G தொழில்நுட்பத்தின் பங்கு அதிமாக இருக்கும். ஏனென்றால் இது வெறும் ஒரு தொலைதொடர்பு சார்ந்த தொழில்நுட்பம் மட்டும் அல்ல. அதையும் தாண்டி இதில் வேறு சில சிறப்புகளும் உள்ளன. மேலும் இந்த தொழில்நுட்பம் 4G-ஐ விட மிகவும் பயன் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மத்திய அரசு நேற்று இந்தியாவில் 5G தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோஃபோன் உள்ளிட்ட சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. 


இந்தச் சூழலில் 5ஜி என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? 5ஜிக்கும் 4ஜிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?


முதலில் 5ஜி தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் பயன்படுத்தும் மொபைல்ஃபோன் எப்படி செயல்படுகிறது என்பது தெரியுமா?


ஒயர்லஸ் தொலைதொடர்பு சாதனங்கள் அனைத்தும் மின்காந்த கதிர்வீச்சு அலை  (Electromagnetic waves) வகைகளில் ஒன்றான வானொலி அலை அல்லது ரேடியோ அலை (Radio waves) பயன்படுத்தப்படுத்தி செயல்படுகிறது. இந்த ரேடியோ அலை ஒளி அலையை போன்ற தன்மையுடையது. எனினும் ஒளி அலையின் அதிர்வெண்ணை (Frequency) விட ரேடியோ அலையின் அதிர்வெண் குறைவாக இருக்கும். இதன் காரணமாக ரேடியோ அலைகள் சுவர்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றில் பயனிக்க முடியும். எனவேதான் இந்த அலைகள் தொலைதொடர்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. 5G Vs 4G என்ன வித்தியாசம்? 5G மொபைல் நெட்வொர்க்கில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?


ஒரு மொபைல்ஃபோன் இயங்க மூன்று விஷயங்கள் தேவை. முதலில் ஒரு மொபைல்ஃபோன் ரேடியோ அலைகளை பெற உதவும் கருவி. அதுதான் நமது இல்லங்களில் பக்கங்களில் இருக்கும் ஆண்டெனா(Antenna). இங்கு இருந்து நான் மொபைல்ஃபோனுக்கு ரேடியோ அலைகள் கிடைக்கும். இரண்டாவது இந்த ஆண்டெனாவை ஒருங்கிணைக்கும் ஒரு கட்டுபாட்டு மையம். அதனை மொபைல் பேஸ் ஸ்டேஷன் (Mobile Base station) என்று அழைப்பார்கள். அது தான் இந்த ஆண்டெனாக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கும் கருவி. மூன்றாவது ஒவ்வொரு பேஸ் ஸ்டேஷன் இடையே இருக்கும் தொடர்பு. இது செயற்கைக்கோளின் உதவியுடன் நடக்கும். இப்படி நாம் ஒரு பக்கம் இருந்து போன் செய்யும் சில நொடிகளில் இந்த அனைத்தும் ஒருங்கிணைந்து வேலை செய்து நமக்கு ஒரு அழைப்பை விடுக்க உதவுகிறது. 


5ஜி என்றால் என்ன?


5ஜி தொழில்நுட்பம் மில்லிமீட்டர் அலை ஸ்பெக்ட்ரமில் (30-300 கிகா ஹெர்ட்ஸ்) என்ற அதிவேக அதிர்வெண் பயன்படுத்தி இயங்கும். இதனால் இதில் பெரியளவில் தரவுகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும். அத்துடன் இதன் வேகமும் 1-20 ஜிபி வரை செல்லும். இதன் காரணமாக பல தேவைக்கு இதை எளிதில் பயன்படுத்த முடியும். 


5ஜி vs 4ஜி:


2000ஆம் ஆண்டு 3G தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகு அதைவிட அதிவேகமாக 4G தொழில்நுட்பம் வந்தது. தற்போது அதற்கு அடுத்தப்படியாக மின்னல் வேக தொழில்நுட்பமாக 5G தொழில்நுட்பம் வந்துள்ளது. இந்த இரண்டிற்கும் ஒரு சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன.   • அதிர்வெண்(frequency):


   5ஜி- 30-300 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்


  4ஜி-  2-8 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்


இந்த மில்லிமீட்டர் அதிர்வெண் பயன்படுத்துவதால் 5G தொழில்நுட்பம் 4G-ஐ விட 10 மடங்கு அதிக அலைவரிசை கொண்டிருக்கும். இதனால் இதன் வேகமும் அதிகரிக்கும். 5G Vs 4G என்ன வித்தியாசம்? 5G மொபைல் நெட்வொர்க்கில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?  • சேவை அளிக்கும் சாதனங்கள்:


 4Gயிடம் அதிகம் நிறைந்த பகுதிகளில் 4ஜி சேவையை பயன்படுத்தும் போது அதன் வேகம் குறையும். ஆனால் 5ஜி தொழில்நுட்பம் இதற்கு மாறாக ஒரே சமயத்தில் ஒரு சதுர கிலோமீட்டரில் 1 மில்லியன் சாதனங்கள் வரை சேவை அளிக்கும் திறன் கொண்டது. ஆகவே கூட்டம் மிகுந்த பகுதிகளிலும் 5G தொழில்நுட்பத்தை தங்குதடையின்றி பயன்படுத்தலாம்.


5ஜி பயன்பாடுகள்:5G Vs 4G என்ன வித்தியாசம்? 5G மொபைல் நெட்வொர்க்கில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?


5G தொழில்நுட்பம் தொலைத் தொடர்புக்கு மட்டுமானது அல்ல. இதை வைத்து 'இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' என்ற மற்ற சாதனங்களை இணையதளம் மூலம் கட்டுப்படுத்தும் முறையும் எளிதாக செய்ய முடியும். அத்துடன் வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கும் இது உதவும். எடிஜ் கம்பியூட்டிங் உள்ளிட்ட பயன்பாடுகளும் இதன் மூலம் எளிதில் செய்ய முடியும். மேலும் 5ஜி யில் இருக்கும் நெட்வோர்க் ஸ்ப்லைசிங் (Network Splicing) மூலம் ஒரே நெட்வோர்க்கை பிரித்து பல நெட்வோர்க் ஆக பயன்படுத்த முடியும். இதன்மூலம் டேடிகேட்டட் லையன் வசதியை எளிதில் பெற முடியும். அத்துடன் பாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட தரவுகளை அனுப்ப இந்த முறையை பயன்படுத்தலாம். 

Tags: 5g 4G Mobile Networks Difference Internet Speed Electromagnetic Wave Radio waves Internet of things Artificial intelligence Virtual Reality

தொடர்புடைய செய்திகள்

Poco M3 Pro 5G Launch | போக்கோ எம்3 ப்ரோ 5G ; இந்தியாவில் இன்று விற்பனை துவக்கம்!

Poco M3 Pro 5G Launch | போக்கோ எம்3 ப்ரோ 5G ; இந்தியாவில் இன்று விற்பனை துவக்கம்!

GO1 ROBO DOG | பல்டி அடிக்கும், செல்ல ரோபோ நாய் ! விலை எவ்வளவு தெரியுமா?

GO1 ROBO DOG | பல்டி அடிக்கும், செல்ல ரோபோ நாய் ! விலை எவ்வளவு தெரியுமா?

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்