தந்தையின் கனவை துரத்தும் மல்யுத்த வீராங்கனை அன்ஷூ மாலிக்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் தகுதிப் பெற்றுள்ள மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர் அன்ஷூ மாலிக்.

இந்திய மல்யுத்த உலகில் வேகமாக வளர்ந்து வரும் வீராங்கனை என்றால் அது அன்ஷூ மாலிக். ஏனென்றால் இதுவரை தான் பங்கேற்ற 6 சீனியர் பிரிவு சர்வதேச போட்டிகளில் 5ல் பதக்கங்களை வென்று சாதித்துள்ளார். குறிப்பாக 57 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்று இவர் அசத்தியுள்ளார். இவர் தனது தந்தையின் நீண்ட நாள் கனவை துரத்தி வருகிறார். யார் இவர்? எப்படி மல்யுத்தத்தில் ஈடுபாடு கொண்டார்? தனது தந்தையின் கனவை எப்படி தனது கனவாக மாற்றினார்?

ஹரியானா மாநிலத்தின் நிதானி என்ற கிராமத்தில் 2001ஆம் ஆண்டு பிறந்தவர் அன்ஷூ மாலிக். இவர் ஒரு பெரிய மல்யுத்த குடும்பத்தில் பிறந்ததால் இவரது ரத்தத்தில் மல்யுத்தம் ஊறிப்போய் இருந்தது. இவருடைய தந்தை தரம்விர் மாலிக் தேசிய அளவில் மல்யுத்த வீரர். மேலும் இவருடைய மாமா பவன் மாலிக் தேசிய மல்யுத்த வீரர் மற்றும் ஹரியானா மாநிலத்தின் கேசரி பட்டத்தை வென்றவர். இதனால் இவர் எளிதாக மல்யுத்த விளையாட்டிற்கு வந்தவர் என்று நினைக்கலாம். ஆனால் இவர் மல்யுத்தம் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. தந்தையின் கனவை துரத்தும் மல்யுத்த வீராங்கனை அன்ஷூ மாலிக்!

அதாவது இவருடைய தந்தை தரம்விர் மாலிக் மல்யுத்த வீரராக இருந்தப் போது ஒரு தேசிய போட்டியில் பங்கேற்றார். அதன்பின்னர் இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மல்யுத்த விளையாட்டை தொடர முடியாத சூழல் உருவானது. அப்போது இவர் தன்னுடைய கனவை தனது மகன் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தார். அதற்காக தன்னுடைய 8 வயது மகனுக்கு மல்யுத்த பயிற்சி அளிக்க தொடங்கினார். ஆனால் அவர் தன்னுடைய மூத்த மகள் மல்யுத்தம் விளையாடுவார் என்று அப்போது கண்டறியவில்லை. தனது ஓய்வு நேரத்தில் மகள் அன்ஷூவிடம் தன்னுடைய நிறைவேறாத மல்யுத்த ஆசைகள் குறித்து தொடர்ந்து பேசி வந்துள்ளார். 

இது அன்ஷூவிற்கு மல்யுத்தம் மீது அதிக ஆசையை ஏற்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒருநாள் தன்னுடைய தம்பி பயிற்சிக்கு செல்லும் போது இவரும் தந்தையிடம் கேட்டு பயிற்சிக்கு வருவதாக கூறியுள்ளார். அப்போது விளையாட்டாக மல்யுத்த களத்தில் இறங்கியுள்ளார். அந்த சமயத்தில் இவருடைய ஆட்டத்தை கண்டு மிரண்டு போன தந்தை தரம்விர் அதிர்ச்சி அடைந்தார். அந்த சமயத்தில் ஒரு முடிவை எடுத்தார். தன்னுடைய பதக்க கனவை தன் மகனுக்கு முன்பாக மகள் அன்ஷூ நிறைவேற்றுவார் என்பது தான் அது. அதன்பின்னர் அவருக்கு தீவிர மல்யுத்த பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளார். தந்தையின் கனவை துரத்தும் மல்யுத்த வீராங்கனை அன்ஷூ மாலிக்!

6 மாதங்களுக்கு பிறகு, அன்ஷூ மாலிக் 3 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்று வந்த வீராங்கனைகளை எளிதாக தோற்கடித்து அசத்தினார். பின்னர் நிதானியிலுள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அதன்பின்னர் ஜூனியர் பிரிவில் 2019ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். மேலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வென்று அசத்தினார். பயிற்சி தொடங்கிய பத்து ஆண்டுகளுக்குள் ஒலிம்பிக் போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளார். தற்போது 19 வயதாகும் இவர் மல்யுத்தத்தில் நீண்ட நாட்களுக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. வரும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்க கனவில் இவரும் முக்கியமான ஒருவர். அதில் பதக்கம் வென்று தனது தந்தைக்கு பெருமை சேர்க்க அன்ஷூ மாலிக் முனைப்புடன் உள்ளார். 

Tags: Tokyo Olympics Wrestling Anshu Malik Indian Wrestler Father's dream Dharamvir Malik CISF

தொடர்புடைய செய்திகள்

WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நடுவர்கள் அறிவிப்பு!

WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நடுவர்கள் அறிவிப்பு!

‛மனசு வலிக்கரது...’ அம்பி வசனத்தை பதிலடியாக கொடுத்த அஸ்வின்!

‛மனசு வலிக்கரது...’ அம்பி வசனத்தை பதிலடியாக கொடுத்த அஸ்வின்!

IPL 2021 Update: செப்டம்பர் 19 தொடங்குகிறதா ஐ.பி.எல்? அக்டோபர் 15-இல் எண்டு கார்டா?

IPL 2021 Update: செப்டம்பர் 19 தொடங்குகிறதா ஐ.பி.எல்? அக்டோபர் 15-இல் எண்டு கார்டா?

Olie Robinson on Twitter : அப்படி என்ன ட்வீட் செய்தார் ஒலி ராபின்சன் - சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தடை ஏன்?

Olie Robinson on Twitter : அப்படி என்ன ட்வீட் செய்தார் ஒலி ராபின்சன்  - சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தடை ஏன்?

WTC Final | IND vs NZ: ”மூணு மேச்சா வெச்சு இருக்கனும்” : இந்தியாவுக்கு பின்னடைவு எனச்சொல்லும் யுவராஜ் சிங்!

WTC Final | IND vs NZ: ”மூணு மேச்சா வெச்சு இருக்கனும்” : இந்தியாவுக்கு பின்னடைவு எனச்சொல்லும் யுவராஜ் சிங்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Tamil Nadu Coronavirus LIVE News :  தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்