WPL Auction 2023 RCB: மந்தனா தலைமையில் களமிறங்கும் பெங்களூர்..! பலம் என்ன? பலவீனம் என்ன? ஓர் அலசல்..!
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை தொடர்ந்து பெங்களூரு அணியின் வீராங்கனைகள், பலம் மற்றும் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
![WPL Auction 2023 RCB: மந்தனா தலைமையில் களமிறங்கும் பெங்களூர்..! பலம் என்ன? பலவீனம் என்ன? ஓர் அலசல்..! WPL Auction 2023 RCB Team Royal Challengers Bangalore Squad Key players Strengths Weakness Full Details in Tamil WPL Auction 2023 RCB: மந்தனா தலைமையில் களமிறங்கும் பெங்களூர்..! பலம் என்ன? பலவீனம் என்ன? ஓர் அலசல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/7529e95fe2c952ff4ac43131b9d0a6f51676354430221571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெங்களூரு அணி:
பெங்களூரு அணி ஆடவருக்கான ஐபிஎல் தொடரில் எப்படி உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளதோ, அதே பாணியில் தன் மகளிர் பிரீமியர் லீக்கிற்கான அணியையும் தேர்வு செய்துள்ளது. நேற்று மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.11.9 கோடி ரூபாயை செலவு செய்து 18 வீராங்கனைகளை பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது.
முந்தைய காலத்தில் பெங்களூரு அணிக்கு கோலி, டிவிலியர்ஸ் மற்றும் கெயில் ஆகியோர் எப்படி மும்மூர்த்திகளாக இருந்தனரோ, அந்த வகையில் ஸ்மிரிதி மந்தனா, நான்கு முறை டி-20 உலகக்கோப்பையை வென்ற எல்லீஸ் பெர்ரி மற்றும் தென்னாப்ரிக்காவின் டேன் வேன் நீகெர்க் ஆகியோர் மகளிர் அணிக்கான மும்மூர்த்திகளாக திகழ்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பலம்:
திறமை வாய்ந்த பல்வேறு வெளிநாட்டு நட்சத்திரங்களை பெங்களூரு அணி கொண்டுள்ளது. எலீஸ் பெர்ரி, சோபி டிவைன், வேன் நீகெர்க் மற்றும் ஹீதர் நைட் போன்றவர்கள், உலகத்தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்கள் ஆவர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவர்கள் கைதேர்ந்தவரகளாக உள்ளனர். ஸ்மிரிதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் ரேணுகா சிங் போன்ற உலகத்தரம் வாய்ந்த இந்திய வீரர்கள் இருப்பது அந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கிறது. அறிமுக தொடரிலேயே கோப்பையை வெல்வதற்கான அனைத்து சாதகங்களையும் இந்த அணி பெற்றுள்ளது.
அணியின் பலவீனம்:
தொடருக்கான போட்டிகள் அனைத்தும் மும்பையில் நடைபெற உள்ள சூழலில், அதற்கேற்ற தரமான இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் அணியில் இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது. நட்சத்திர வீரர்கள் நிறைந்து இருப்பதால், அணிக்கு தேவையான சரியான 11 பேரை தேர்ந்து எடுப்பதிலும் குழப்பம் ஏற்படலாம்.
ஸ்மிருதி மந்தனா:
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் அதிகபட்சமாக, இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவை பெங்களூரு அணி ரூ.3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதைதொடர்ந்து, ரிச்சா கோஸை ரூ.1.9 கோடிக்கும், எலிஸ் பெர்ரியை ரூ.1.7 கோடிக்கும், ரேணுகா சிங்கை ரூ.1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்த அணியை, ஸ்மிருதி மந்தனா வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி:
ஸ்மிருதி மந்தனா - ரூ.3.4 கோடி
சோஃபி டெவின் - ரூ.50 லட்சம்
எலிஸ் பெர்ரி - ரூ.1.7 கோடி
ரேணுகா சிங் தாக்கூர் - ரூ.1.5 கோடி
ரிச்சா கோஷ் -ரூ.1.9 கோடி
எரின் பர்ன்ஸ் - ரூ.30 லட்சம்
திஷா கசத் - ரூ.10 லட்சம்
இந்திராணி ராய் - ரூ.10 லட்சம்
ஸ்ரேயங்கா பாட்டீல் - ரூ.10 லட்சம்
கனிகா அஹுஜா - ரூ.35 லட்சம்
ஆஷா ஷோபனா - ரூ.10 லட்சம்
ஹீதர் நைட் - ரூ.40 லட்சம்
டேன் வான் நிகெர்க் - ரூ.30 லட்சம்
ப்ரீத்தி போஸ் - ரூ.30 லட்சம்
பூனம் கெம்னார் - ரூ.10 லட்சம்
கோமல் சன்சாத் - ரூ.25 லட்சம்
மேகன் ஷட் - ரூ.40 லட்சம்
சஹானா பவார் - ரூ.10 லட்சம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)