மேலும் அறிய

World Chess Championship: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்: சீன வீரரை வீழ்த்திய தமிழர்

World Chess Championship 2024: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார், தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ்

உலக செஸ் சாம்பின் போட்டியின் , 14வது சுற்று ஆட்டத்தில் சீன வீரர் லீரெனை வீழ்த்தினார் குகேஷ்.விஸ்வநாத் ஆனந்திற்கு பிறகு, உலக சாம்பியன் பட்டம் பெறும் 2வது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் என்ற பெருமையை பெறுகிறார் குகேஷ். இதுமட்டுமன்றி, உலக சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். 

இந்த வெற்றி குறித்து குகேஷ் தெரிவிக்கையில், இரண்டு வருடங்கள் தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக வேண்டியிருந்தது. ஒரு இளம் செஸ் வீரரின் கனவு எதுவோ, அது நிறைவேறி இருக்கிறது என குகேஷ் தெரிவித்துள்ளார்.

சீன வீர தோல்விக்கு எனது வருத்தங்களை தெரிவிக்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு , இந்தியாவிடமிருந்து சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. எனக்கு ஆதரவளித்த இந்திய நாட்டு மக்களுக்கு சமர்பிக்கிறேன் என்றும் உலக சாம்பியன் குகேஷ் தெரிவித்தார்.

ஆனந்த கண்ணீரில் குகேஷ்:

 

18 வயதில், உலக சாம்பியன் பட்டம் பெற்று, இந்திய நாட்டிற்கு பெருமை தேடி தந்திருக்கிறார் குகேஷ்.

சிங்கப்பூரில், உலக சாம்பியன் தொடரானது நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட ஆட்ட தொடரில், 13 சுற்றுகள் குகேஷ் - சீன வீரர் லிரென் ஆகிய  இருவரும் 6.5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற 14வது சுற்று பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியிருந்தது. இந்த ஆட்டமானது டிராவில் முடிவதற்கு வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், சீன வீரர் செய்த தவற்றை, குகேஷ் சரியாக பயன்படுத்தி, 58வது நகர்த்தலில் வெற்றி பெற்று, சாதனை பட்டத்தை பெற்றார். 

தலைவர்கள் வாழ்த்து:

செஸ் வரலாற்றில், குகேஷ் தனது பெயரை பதிவு செய்துள்ளதாக , பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் வாழ்த்து பதிவில். “

”குகேஷ் சாதனைக்கு   வாழ்த்துக்கள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவு. 

அவரது வெற்றி, சதுரங்க  வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு , முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும்  வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget