Neeraj Chopra : அடுத்தடுத்து ஃபவுல்.. கிடைத்தது வெள்ளி! தடுமாறிய தங்க மகன்! நீரஜ் சொதப்பியது எங்கே?
நீரஜ் எறிந்த ஆறு சுற்றுகளில், மூன்று சுற்றுகள் ஃபவுலாக அமைந்தது . இதில், ஏதாவது ஒன்றில் அவர் 90 மீட்டர்கள் எறிந்திருந்தால் வெள்ளி பதக்கம் நிச்சயம் தங்க பதக்கமாக மாறியிருக்கும்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் ரோகித் யாதவ் களமிறங்கினர். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
6 சுற்றுக்களாக நடைபெறும் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஃபவுலாக வீசினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் முறையே அதிகப்பட்சமாக 86.37 மீட்டர் தூரம் வீசி பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார்.
நான்காவது சுற்றில் 88.13 மீட்டர் தூரம் வீசி நீரஜ் பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி வெள்ளி பதக்கத்தை தக்க வைத்தார். தொடர்ந்து 5 வது சுற்று நீரஜ் சோப்ராக்கு ஃபவுலாக அமைய, 6 வது சுற்றும் ஃபவுலாக அமைந்தது.
Here’s the 88.13m Throw for #NeerajChopra
— IndiaSportsHub (@IndiaSportsHub) July 24, 2022
Bought back the smile and in Silver Medal position
Video Courtesy | WorldAthletics YT pic.twitter.com/7Be3lghcqr
நீரஜ் எறிந்த ஆறு சுற்றுகளில், மூன்று சுற்றுகள் ஃபவுலாக விழுந்தது. இதில், ஏதாவது ஒன்றில் அவர் 90 மீட்டர்கள் எறிந்திருந்தால் வெள்ளி பதக்கம் நிச்சயம் தங்க பதக்கமாக மாறியிருக்கும். ஆனால், இதுவரை சர்வதேச அளவில் நீரஜ் அதிகப்பட்சமாக 89.94 மீட்டர் மட்டுமே தூரமாக வீசியுள்ளார். கடந்த மாதம் ஸ்டாக்ஹோமில் நடந்த டயமண்ட் லீக்கில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வழியில் சோப்ரா, ஈட்டி எறிதலில் 89.94 மீ. தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்தார். இன்று அதையும் நீரஜ் முறியடிக்க அதிக வாய்ப்பிருந்தது. அந்த மூன்று சுற்றுகள் மட்டும் ஃபவுலாகாமல் இவர் முயற்சி செய்திருந்தால் நீரஜை மீண்டும் ஒருமுறை உலக நாடுகள் உற்று பார்த்திருக்கும்.
நீரஜ் பதக்க பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். அதேபோல், கிரெனடா நாட்டை சேர்ந்த பீட்டர்ஸ் தங்கப்பதக்கமும், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜூலியன் வெபர் வெண்கல பதக்கத்தை தட்டி சென்றனர்.
மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் அதிகப்பட்சமாக 78.72 மீட்டர் தூரம் மட்டுமே வீசி 10 இடத்தை பிடித்தார்.
இதற்கு முன்னதாக, அஞ்சு பாபி ஜார்ஜ் உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலின் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய வீராங்கனையாகவும், 2003 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்தை வென்ற முதல் வீரராகவும் இருந்தார்.
சரியாக, 19 ஆண்டுகளுக்கு பிறகு நீரஜ் சோப்ரா ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இன்று இந்தியாவில் ஏக்கத்தை பூர்த்தி செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்