மேலும் அறிய

WFI: "மல்யுத்த வீராங்கனைகள் புகாரில் உண்மையில்லை.." மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய இந்திய மல்யுத்த சங்கம்..!

பாலியல் புகார் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய மல்யுத்த சங்கம் மத்திய விளையாட்டுத்துறைக்கு 8 பக்கங்கள் கொண்ட பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், அன்ஷூ மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் கைசர்கஜ்ச் எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். 

பாலியல் புகார்

பஜ்ரங் புனியா, வினேஷ் போகர் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் ஜன.18ஆம் தேதி காலை இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தொடக்கத்தில் எதற்காக நடைபெற்றது என்று தெரியவில்லை. 

ஆனால் தொடர்ந்து மாலை 4 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பல மல்யுத்த பெண்கள் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இன்று இந்த உண்மையை நான் வெளியே சொல்கிறேன். ஆனால், நாளை நான் உயிருடன் இருப்பேனா, இல்லையா என்பது தெரியாது. என்னுடன் அமர்ந்திருக்கும் சில பெண் மல்யுத்த வீராங்கனைகளும் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். நாங்கள் எங்களுக்காக போராடவில்லை. மல்யுத்தத்தை காப்பாற்ற போராடுகிறோம்.

மன ரீதியாக தொல்லை

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் நான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என்று வினேஷ் போகட் கூறினார். எனக்கு தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. பிரிஜ் பூஷன் சரண் சிங் நான்கு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவர்கள் மீது புகார் வரும்போதெல்லாம் நேராக சென்றால் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.

அதேபோல், பயிற்சியாளர்கள் எங்களை தினமும் சித்திரவதை செய்கிறார்கள். பயிற்சியாளரின் அனுமதி இல்லாமல் மல்யுத்த வீரர்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “மல்யுத்த வீரர்களுக்கு ஸ்பான்சர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. மல்யுத்த வீரர்களை சென்றடைய வேண்டிய நிதி உதவி அவர்களை சென்றடையவில்லை. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கும் மல்யுத்த வீரர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக யாரும் எதுவும் கூற முடியாது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்” என பஜ்ரங் புனியா தெரிவித்திருந்தார்.

விளையாட்டுத்துறையில் இந்தப் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கடந்த சில நாள்களாக கவனமீர்த்து வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்ததை அடுத்து தங்கள் போராட்டத்தை வீரர்கள் கைவிட்டனர்.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு:

மேலும் இதுகுறித்து 72 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், வீரர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுத்து இந்திய மல்யுத்த சங்கம் மத்திய விளையாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்திய மல்யுத்த சங்கம் மத்திய விளையாட்டுத்துறைக்கு 8 பக்கங்கள் கொண்ட பதில் கடிதம் அனுப்பியுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க சங்கம் அமைத்துள்ள குழுவில் வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget