Tokyo Paralympics: டேபிள் டென்னிஸ் இரண்டாவது குரூப் போட்டியிலும் சோனல் பட்டேல் தோல்வி..!
டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சோனல் பட்டேல் இரண்டாவது குரூப் போட்டியில் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சோனல் பட்டேல் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 3 பிரிவில் பங்கேற்றுள்ளார். தற்போது டேபிள் டென்னிஸ் போட்டிகளின் குரூப் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் நேற்று நடைபெற்ற முதல் குரூப் போட்டியில் சோனல் பட்டேல் 11-9, 3-11, 17-15, 7-11, 4-11 என்ற கணக்கில் சீனாவின் கியூ லீ யிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இன்று இரண்டாவது குரூப் போட்டி நடைபெற்றது. இதில் சோனல் பட்டேல் தென்கொரியாவின் மீ குயூ லீயை எதிர்த்து விளையாடினார்.
அந்தப் போட்டியில் முதல் கேமை 12-10 என்ற கணக்கில் சோனல் பட்டேல் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் சிறப்பாக விளையாடிய தென்கொரியா வீராங்கனை மீ குயூ 11-5 என்ற கணக்கில் வென்றார். இதனால் இரு வீராங்கனைகளும் 1-1 என சமனில் இருந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது, நான்கவது ஆகிய இரண்டு கேம்களையும் தொடர்ச்சியாக 11-3,11-8 என்ற கணக்கில் தென்கொரியா வீராங்கனை மீ குயூ வென்றார். அத்துடன் 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்றார். இரண்டு குரூப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தனால் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சோனல் பட்டேல் இழந்தார்.
#ParaTableTennis Update#IND Sonal Patel goes down to #KOR Mi Gyu Lee 1-3 (12-10, 5-11, 3-11, 9-11) in the second group match
— SAI Media (@Media_SAI) August 26, 2021
We wish her the best for future competitions#Tokyo2020#Paralympics#Praise4Para
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சோனல் பட்டேல் இதுவரை 20 சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். அதில் 12 தொடர்களில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இதேபோல் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Just In!!
— SAI Media (@Media_SAI) August 26, 2021
Watch #ParaTableTennis player @BhavinaPatel6 talk about her win over World No. 10 #GBR M. Shackleton, making her way to the knockouts in the Class 4 category
Bhavina appreciates all the love and support pouring in from the Indian fans#Cheer4India #Praise4Para pic.twitter.com/0VoLG6v1dF
முன்னதாக இன்று காலை நடைபெற்ற கிளாஸ் 4 பிரிவு டேபிள் டென்னிஸ் குரூப் போட்டியில் இந்தியாவின் பாவனிபென் பட்டேல் தன்னுடைய இரண்டாவது போட்டியில் விளையாடினார். அதில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஷேகில்டனை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை 11-7,17-15,13-11 என்ற கணக்கில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: வாழ பிடிக்காதவர்கள் இவரை பார்த்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்! 48 வயதில் பாரலிம்பிக் விளையாடும் இப்ராஹிம்!