India Wins Gold: இந்தியாவுக்கு முதல் தங்கம்... துப்பாக்கிச் சுடுதலில் ‛அவானி லெகாரா’ தெறி!
ரேங்கிங்கில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அவர், எதாவது ஒரு பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதை இப்போது உறுதி செய்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் தொடர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் அவானி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் தங்கப்பதக்கம் இது. பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலிலும் இந்தியாவுக்கு இதுவே முதல் தங்கப்பதக்கம். ராஜாஸ்தானைச் சேர்ந்த அவானி லெகாரா, பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
GOLD MEDAL ALERT 🚨
— IndiaSportsHub (@IndiaSportsHub) August 30, 2021
Young Teen sensation @AvaniLekhara scripts history by grabbing Gold at 10mtr Air Rifle event
✨First ever Gold in #Paralympics
✨First Gold at #TokyoParalympics
✨Scored 249.6 in Finals
Shoots Equal WORLD RECORD#Shooting
📸 @indianshooting pic.twitter.com/qYeUe6SymB
2012-ம் ஆண்டு, தன்னுடைய 11 வயதில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தால், அவானிக்கு முதுகு தண்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மீண்டு எழுந்த அவர் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளில் கவனம் செலுத்தினார். பீய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை முன்மாதிரியாக கொண்ட அவானி, துப்பாக்கிச் சுடுதலில் முழுமையாக கவனல் செலுத்த தொடங்கினார். 2017-ம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று தடம் பதித்தார். தற்போது, ரேங்கிங்கில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அவர், எதாவது ஒரு பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதை இப்போது உறுதி செய்துள்ளார்.
முன்னதாக, பாராலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் இந்திய அணி அதிபட்சமாக ஒரே தொடரில் மொத்தமாகவே அதிகபட்சமாக 4 பதக்கங்களை வென்றுள்ளது. ஆனால் இம்முறை ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் சீன வீராங்கனை ஷியோ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் அவர் தோற்றிருந்தாலும், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான டி-47 உயரம் தாண்டுதல் போட்டியில், இதில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர். இதன்மூலம் இந்த முறை பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி மொத்தமாக அதிக பதக்கங்களை வெல்வது உறுதியாகிவிட்டது.
தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!