தாய்லாந்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த திருப்பத்தூர் வீரமங்கை! சதுரங்க வீராங்கனையின் சாதனை!
சதுரங்க போட்டியில் தாய்லாந்து நாட்டில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வீரமங்கை யக்ஷிணி.

சதுரங்க போட்டியில் தாய்லாந்து நாட்டில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வீரமங்கை யக்ஷிணி, உலக அளவில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிவேன் எனக் கூறியுள்ளார்.
சதுரங்கப் போட்டி மீது ஆர்வம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த பொன்முடி என்பவரின் மகள் யாசினி. இவர், திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில், சதுரங்கப் போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தினால் பல வெற்றிகளை குவித்து தன் வீட்டில் பதக்கங்களையும் ஷீல்டுகள், சான்றிதழ்களை குவித்து வைத்திருக்கிறார். யாசினியின் திறமையின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு பள்ளி நிர்வாகம் வாய்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சிறுமி
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக யக்ஷிணி எங்கு சதுரங்க போட்டி நடந்தாலும், அங்கு வெற்றி பெற்று முதலாவதாக வருவார். சமீபத்தில் தாய்லாந்தில் நாட்டில் பாங்காங் பகுதியில் யூத் ஏசியன் போட்டியானது நவம்பர் 20 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 32 நாடுகள் கொண்ட சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மேலும், யாசினி இந்தப் போட்டியில் இந்தியா அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும், சிறுமி யாஷினி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவிற்கு தங்க பக்கத்தை வாங்கித் தருவதே என சிறுமி கூறினார்.





















