Tamil Thalaivas: புனே அணியிடம் தோல்வி; புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் இருக்கும் இடம் இதுதான்
Tamil Thalaivas: நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 26 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
ல்ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் 60வது லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து நேற்று அதாவது ஜனவரி 7-ஆம் தேதி களமிறங்கியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 26 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் புனேரி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றது. அதேபோல் இந்த தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 14 புள்ளிகளுடனும் 44 எதிர்மறை ஸ்கோர் பாய்ண்டுகளுடனும் 11வது இடத்தில் உள்ளது.
இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 12 லீக் போட்டிகள் மீதமுள்ளது.
தமிழ் தலைவாஸ் புரோ கபடி லீக்கில் மீதம் உள்ள போட்டிகள்
- ஜனவரி 10: உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ் – டோம் என்.எஸ்.சி.ஐ. மும்பை
- ஜனவரி 14: ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ் – எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கம், ஜெய்ப்பூர்.
- ஜனவரி 16: பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கம், ஜெய்ப்பூர்.
- ஜனவரி 21: பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ் - கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.
- ஜனவரி 24: தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.
- ஜனவரி 28: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா - பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.
- ஜனவரி 31: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் - பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.
- பிப்ரவரி 4: குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.
- பிப்ரவரி 6: தமிழ் தலைவாஸ் vs உ.பி யோதாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.
- பிப்ரவரி 11: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன் - நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.
- பிப்ரவரி 14: தபாங் டெல்லி vs தமிழ் தலைவாஸ் - நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.
- பிப்ரவரி 18: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் – தவ் தேவிலால் உள்விளையாட்டு அரங்கம், பஞ்ச்குலா.