Pro Kabaddi league: தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி - அரை இறுதிக்கு முதல்முறையாக தகுதி
யு.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டை பிரேக்கர் முறையில் தமிழ் தலைவாஸ் வென்றது. இதன்மூலம் முதல்முறையாக ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அரையிறுதிக்குள் நுழைந்தது.
![Pro Kabaddi league: தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி - அரை இறுதிக்கு முதல்முறையாக தகுதி Tamil Thalaivas have reached the semi-finals of Pro Kabaddi 2022 by defeating UP Yoddhas 6-4 in the tie breaker Pro Kabaddi league: தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி - அரை இறுதிக்கு முதல்முறையாக தகுதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/13/eaa2771ef0f057c0b6d567387544085b1670951167092588_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Pro Kabaddi 2022: 12 அணிகள் பங்கேற்கும் ப்ரோ கபடி போட்டியின் 9-வது சீசன் அக்டோபர் 14ம் தேதி பெங்களூரில் கொண்டாட்டமாக தொடங்கியது.
டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர். இன்று நடைபெற்ற பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் யு.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி.
யு.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டை பிரேக்கர் முறையில் தமிழ் தலைவாஸ் வென்றது.
முன்னதாக, தமிழ் தலைவாஸும், யு.பி.யோத்தாவும் 36-36 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் தமிழ் தலைவாஸ், 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
Into the semis in style!#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #VivoProKabaddi | #FantasticPanga pic.twitter.com/ZLeAmSPe4x
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 13, 2022
இதனிடையே, மற்றொரு பிளே-ஆஃப் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 56-24 என்ற புள்ளிக் கணக்கில் டபாங் டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
இந்த அணிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. அதன்படி, லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன.
இதே போல் 3-வது இடத்தை பெங்களூரு புல்சும் (74 புள்ளி), 4-வது இடத்தை உ.பி. யோத்தாசும் (71 புள்ளி), 5-வது இடத்தை தமிழ் தலைவாசும் (66 புள்ளி), 6-வது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லியும் (63 புள்ளி) பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு வந்தது.
KABADI AT IT'S BEST,SPORTS AT IT'S BEST:) #TamilThalaivas
— Dineshkumar (@dinesshankar108) December 13, 2022
Tamil Thalaivas qualify for the semi-finals of Pro Kabaddi League for the first time in history of PKL pic.twitter.com/yd8BXtOqN8
நடப்பு சீசனில் 71 புள்ளிகளை குவித்த உ.பி யோதாஸ் அணி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்த அணியாக பிளேஆஃப்க்கு முன்னேறியது. அதே நேரத்தில், தமிழ் தலைவாஸ் லீக் கட்டத்தின் முடிவில் 66 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், தொடரில் முதல்முறையாக பிளேஆஃப் முன்னேறியது.
இரு அணிகளிலும் பர்தீப் நர்வால், நரேந்தர், அஜிங்க்யா பவார் மற்றும் ரோஹித் தோமர் போன்ற ரெய்டர்கள் நல்ல ஃபார்மில் இருந்தனர்.
தமிழ் தலைவாஸ் அணியில் பவன் செஹ்ராவத் இல்லாத நிலையில், நரேந்தர் ஹோஷியார் 21 போட்டிகளில் 220 ரெய்டு புள்ளிகளுடன் தலைவாஸிற்கான ரெய்டிங் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
மறுபுறம், பர்தீப் நர்வால் 21 போட்டிகளில் 208 ரெய்டு புள்ளிகளுடன் பிகேஎல்லில் தனது நிலையான ஆட்டத்தை தொடர்ந்துள்ளார். இரண்டு நட்சத்திர ரைடர்களும் அதிக ரெய்டு புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பிடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)