Pawan Sehrawat : தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷெராவத் நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. அணி நிர்வாகம் சொன்னது என்ன?
புரோ கபடி லீக் (பிகேஎல்) தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேப்டன் பவன் பவன் ஷெராவத்தை ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தலைவாஸ் அணிக்காக களமிறங்கிய கேப்டன் பவன் ஷெராவத் ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பவன் ஷேராவத் நீக்கம்
புரோ கபடி லீக் (பிகேஎல்) தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேப்டன் பவன் பவன் ஷெராவத்தை ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால், நடப்பு சீசனில் அவர் இனி பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. “ஒழுங்கு காரணங்களுக்காக பவன் செஹ்ராவத் மீதமுள்ள சீசனுக்கு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது உரிய பரிசீலனைக்குப் பிறகும், அணியின் நடத்தை விதிகளுக்கு இணங்கவும் எடுக்கப்பட்ட முடிவாகும்” என்று தலைவாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
செஹ்ராவத், இந்த சீசனுக்கு முன்பு தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் இருந்து தமிழ் தலைவாஸ் அணியில் சேர்ந்தார். புதிய அணிக்காக அவர் முதல் மூன்று ஆட்டங்களில் விளையாடியிருந்த நிலையில்
கேப்டன் இல்லாமல் கிடைத்த வெற்றி
கேப்டன் இல்லாமல் களமிறங்கிய தமிழ் தலைவாஸ், வெள்ளிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸை எதிர்கொண்டு 46–36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தலைவாஸ் அணி நான்கு ஆட்டங்களில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என சமநிலையைப் பேணி வெற்றிப் பாதைக்கு திரும்பியது.
இந்த ஆட்டத்தில் அர்ஜுன் தேஷ்வால் தனித்து பிரகாசித்து 17 புள்ளிகள் எடுத்தார். அதோடு, நரேந்தர் கண்டோலா, ரோனக், ஆஷிஷ் உமேத், ஹிமான்ஷு ஆகியோரும் தாக்குதலும் தற்காப்பிலும் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். எதிரணிக்காக தேவங்க் தலால் சூப்பர் 10 அடித்தாலும், அது பெங்கால் வாரியர்ஸை காப்பாற்ற முடியவில்லை.
ஆட்டம் எப்படிச் சென்றது?
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அர்ஜுனும், தேவங்கும் தாக்குதலை ஆரம்பித்தனர். அர்ஜுன், தலைவாஸுக்கு விரைவாக முன்னிலை கொடுத்தார். தேவங்கின் சுறுசுறுப்பான ஆட்டம் பெங்கால் வாரியர்ஸை சில புள்ளிகள் சேர்க்கச் செய்தாலும், தலைவாஸ் தற்காப்பு அதை கட்டுக்குள் வைத்தது. முதல் 14 நிமிடங்களிலேயே தலைவாஸ் அணி முழுமையான ஆதிக்கத்தை நிலைநாட்டி, எதிரணியை ஆல் அவுட் செய்து பத்து புள்ளிகள் முன்னிலையில் சென்றது.
முதல் பாதி நேரத்தில் அர்ஜுன்-நரேந்தர் கூட்டணி 13 புள்ளிகளைச் சேர்த்து, 23–11 என்ற கணக்கில் தலைவாஸ் அணிக்கு வலுவான முன்னிலை பெற்று தந்தது.
இரண்டாம் பாதியில் தேவங்க் தலால் மீண்டும் ஆட்டத்தில் தீவிரமாக பங்கேற்று, பெங்கால் வாரியர்ஸை எட்டுப் புள்ளிகள் வித்தியாசத்திற்கு கொண்டு வந்தார். ஆனால் முக்கிய தருணங்களில் தலைவாஸ் தற்காப்பு சிதறாமல் நின்றது. அர்ஜுன் தனது சூப்பர் 10 ஐ நிறைவு செய்து, ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில்அணிக்கு பதினொரு புள்ளிகள் முன்னிலை உறுதிசெய்தார்.
இறுதிப் பகுதிகளில் தேவங்க் தனது சூப்பர் 10-ஐ நிறைவு செய்தாலும், பெங்கால் வாரியர்ஸால் ஆட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. கடைசி இரண்டு நிமிடங்களில் சூப்பர் டேக்கிள் அடித்து வித்தியாசத்தை குறைத்தாலும், 46–36 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றியை உறுதிசெய்தது.






















