Summer Camp: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு.. விவரம் இதோ..
Summer Camp Training: விளையாட்டுத் துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி கட்டணமானது குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இரு வேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி:
சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013-ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- b கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம். வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட் கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் வில்வித்தை துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1.500/-ல் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ.2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது.
image credits: @pixabay
கட்டணம் குறைப்பு:
ஆனால் மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 78 பயிற்றுனர்களின் சேவை மாணவ மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும், இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில் ஏற்கனவே, வெல்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ. 200 லிடுந்து ரூ. 2000 வரை ) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை, தற்போது முறைப்படுத்தி, அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500/-ம் பிற மாவட்டங்களில் ரூ.200/-ம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செலவின தொகை அதிகரிப்பு:
இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை சிற்றுண்டி. சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும். 2013-ஆம் முதல் 2019 ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை.
2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைகால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ. 15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.