IND vs SL | இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சு
இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் தங்களது அறிமுகப் போட்டியில் விளையாட உள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச உள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தஸீன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
Moment to cherish! 😊 👍
— BCCI (@BCCI) July 18, 2021
A loud round of applause for @ishankishan51, who will make his ODI debut on his birthday, along with @surya_14kumar. 👏 👏 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/rf0sHqdzSK pic.twitter.com/FITavg37PH
இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் தங்களது அறிமுகப் போட்டியில் விளையாட உள்ளனர். இஷான் கிஷான் தனது பிறந்தநாளில் இந்திய அணிக்காக அறிமுகப் போட்டியில் விளையாட உள்ளது அவருக்கு மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். ஐ.பி.எல். தொடரில் தங்களது திறமையை வெளிக்காட்டியது முதல் இந்த போட்டியில் வாய்ப்புகளைப் பெற்ற இளம் வீரர்களுக்கு இந்த தொடர் தங்களது திறமையை வெளிக்காட்ட மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
Toss & Team News from Colombo:
— BCCI (@BCCI) July 18, 2021
Sri Lanka have won the toss & elected to bat against #TeamIndia in the first #SLvIND ODI.
Follow the match 👉 https://t.co/rf0sHqdzSK
Here's India's Playing XI 👇 pic.twitter.com/eYNANlZ9ij
இந்திய அணி விவரம்:
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ப்ரித்வி ஷா, இஷான் கிஷான், மணிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர்,புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Your Team Sri Lanka 🇱🇰 for the first ODI against India! 🙌
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 18, 2021
LIVE: https://t.co/B3ikscR5Zm#SLvIND pic.twitter.com/JpdbBN4lNG
இலங்கை அணி விவரம்:
தசுன் சனகா தலைமையிலான இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்சே, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா,வனிந்து ஹசரங்கா, சமிகா கருணரத்னே,இசுரு உதானா, துஷ்மந்தா சமீரா,லக்ஷன் சந்தகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
IRE vs SA: அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்... ரெக்கார்டுகளை தகர்த்த இரண்டு பேட்ஸ்மேன்கள்!





















