Singapore Open 2022: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: ஆண்டின் முதல் பிடபிள்யூஎஃப் 500 சாம்பியன் பட்டத்தை வென்று பி.வி.சிந்து அசத்தல் !
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், மஞ்சுநாத், பிரணாய், அஷ்மிதா சாலிஹா, துருவ் கபிலா-அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் மற்றும் பிரணாய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜூன் மற்றும் துருவ் கபிலா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இதில் பி.வி.சிந்து மட்டும் காலிறுதி மற்றும் அரையிறுதியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 11வது இடத்திலுள்ள சீனாவின் வாங்க் ஸிங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை பி.வி.சிந்து எளிதாக வென்றார். அந்த கேமை பி.வி.சிந்து 21-9 என்ற கணக்கில் மிகவும் எளிதாக வென்றார்.
PV SINDHU WINS SINGAPORE OPEN 🏆🇮🇳
— The SportsGram India (@SportsgramIndia) July 17, 2022
Final score:
🇮🇳 Sindhu 21-9 11-21 21-15 Wang 🇨🇳
This is Sindhu's 3rd tour title of the year. She has previously won Syed Modi & Swiss Open ⭐#SingaporeOpen2022 | #Badminton pic.twitter.com/7qW6xNoXKr
இதையடுத்து இரண்டாவது கேமில் சீன வீராங்கனை வாங்க் ஸிங் இ சுதாரித்து கொண்டு ஆடினார். அவர் இரண்டாவது கேமில் வேகமாக புள்ளிகளை சேர்த்து வந்தார். அந்த கேமை 21-11 என்ற கணக்கில் சீன வீராங்கனை வென்றார். இரண்டு வீராங்கனைகளும் தலா 1 கேமை வென்று இருந்ததால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடைபெற்றது.
அதில் தொடக்கத்தில் இரண்டு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். அதன்பின்னர் பி.வி.சிந்து தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் பி.வி.சிந்து 21-15 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் 21-9,11-21,21-15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் பி.வி.சிந்து நடப்பு ஆண்டில் சர்வதேச பேட்மிண்டனில் முதல் முறையாக 500 சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். ஏற்கெனவே பி.வி.சிந்து இந்தாண்டு சையத் மோடி பேட்மிண்டன் தொடர் மற்றும் ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்களை வென்று இருந்தார். இந்தச் சூழலில் தற்போது சிங்கப்பூர் ஓபன் தொடரையும் வென்று அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்