மேலும் அறிய

Udhayanidhi Stalin: "விளையாட்டில் எனக்கு இன்ஸ்பிரேஷன் இவர்தான்" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி

தங்கை துளசிமதி சாதனைகள், பதக்கங்களை பார்க்கும்போது, வாரம் ஒருமுறை ஒருமணி நேரமாவது பேட்மிண்டன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்றது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா துணை முதல்வர் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கில் நடைபெற்றது. விழாவில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை துணை முதல்வர் வழங்கினார். 

Udhayanidhi Stalin:

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள வீரர் வீராங்கனைகளுக்கு 1500 மேற்பட்டவருக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்து, கால்பந்து, கைப்பந்து, வலை பயிற்சி நெட்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகள் என மொத்தம் 707 ஊராட்சிகளில் உள்ள 1500 மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்து, கால்பந்து, கைப்பந்து, வலை பந்து நெட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். விழாவில் சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

 குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, துணை முதல்வர் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இவ்விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மக்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "சேலம் மாவட்டத்திற்கு பல முறை வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சி. பிரசாரம், திருமண விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள், ஆய்வுக் கூட்டங்கள், இளைஞர் அணி மாநாடு என பலமுறை வந்திருக்கிறேன். துணை முதல்வராக முதல்முறையாக சேலம் வந்து கலைஞர் விளையாட்டு உபகரணத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது. 12,565 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் 26 மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. 27-வது மாவட்டமாக சேலத்தில் வழங்கப்படுகிறது. விழா மேடையில் பாராலிம்பிக் வீரர்கள் தங்கவேலு மாரியப்பன், துளசிமதி முருகேசன் இருவரும் இடம்பிடித்துள்ளனர். விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் உதாரணமாக இருவரும் விளையாடி வருகின்றனர். எனக்கு இன்ஸ்பிரேஷனாக தங்கை துளசிமதி உள்ளார். அவரின் சாதனைகள், பதக்கங்களை பார்க்கும்போது, வாரம் ஒருமுறை ஒருமணி நேரமாவது பேட்மிண்டன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

Udhayanidhi Stalin:

மேலும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுக்காக ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட 36 வகை போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த முறை 6 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில், இந்த வருடம் 11 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதன் மூலம் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் வரவேற்பு தெளிவாக தெரியும். கடந்த முறை சேலம் 19-வது இடத்தில் இருந்து, இந்த முறை 3-வது இடத்தை பதக்கப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 23-ம் தேதி வரை போட்டிகள் நடப்பதால் முதலிடம் செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கடந்த ஆண்டு 13-வது இடமும், தற்போது 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 3350 பேருக்கு 110 கோடி வழங்கியுள்ளார். விளையாட்டு வீர்ர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப்பணி வழங்கப்படும். தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளைக்கு முதல்முதலில் முதல்வர் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அந்த அறக்கட்டளை மூலம் ஏழை எளிய விளையாட்டு வீர்ர்களுக்கு உதவி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த அறக்கட்டளை 69 வீர்ர்களுக்கு ரூ.12 கோடி வழங்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 6 வீர்ர்களில் 4 பேர் பதக்கம் பெற்றனர். அவர்களுக்கு ரூ.5 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

விளையாட்டு வீர்ர்களுக்கு மட்டுமல்ல மகளிருக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் பொற்கால ஆட்சியாக உள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் தற்போது தொழில்முனைவோராக உயர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.96 ஆயிரம் கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விடியல் பயணம் திட்டம் மூலம் மகளிர் 530 கோடி பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை மகளிர் சேமித்து வருகின்றனர். காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு 20 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தில் 3 லட்சம் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறது.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இது தொடர்பாக சில கோரிக்கைகள் உள்ளது. அந்த திட்டத்திற்கும் நான்தான் பொறுப்பு. உங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று, தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்.

 

முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக, வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 37 ஆயிரம் பட்டாக்கள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும்பட்டா பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளை தாயுள்ளத்தோடு திராவிட மாடல் அரசு நடத்தி வருகிறது. அவர்களுக்கான உதவித் தொகை ரூ. 1000 இருந்து ரூ1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் முதலம் ரூ.1 லட்சம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞர் விளையாட்டு உபகரணங்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். இத்திட்டம் நகரங்களுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் மணிமேகலை விருது சேலம் மாவட்டத்தில் 2 சுய உதவிக்குழுவினருக்கு வழங்கப்பட உள்ளது.

விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சேலத்தில் பன்னோக்கு விளையாட்டு மையம் ரூ.20 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிக்கு மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி மேட்டூர், ஆத்தூர், சேந்தமங்கலம் தொகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்படும். சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் ரூ.3.65 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். சேலத்தில் விளையாட்டு வீர்ர்கள் தங்கி விளையாடி வகையில் 60 வீர்ர்கள் தங்கி விளையாட ரூ.7 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு விடுதி உருவாக்கப்படும்" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget