Ronaldo: புண் படுத்திட்டே இருக்கீங்களேடா..! ரொனால்டோ பேனரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..! வீடியோ வைரல்
Ronaldo; போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனால்டோவின் பேனர் கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்களால் அடித்து நொறுக்கப்படும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Ronaldo; போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனால்டோவின் பேனர் கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்களால் அடித்து நொறுக்கப்படும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
விளையாட்டுப் போட்டியில் கால்பந்து போட்டிக்குத்தான் உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். அதேபோல், உலகில் உள்ள பிரபலங்களில் அதிகப்படியான ஃபளோவர்களைக் கொண்டிருப்பது என்றால் அது போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிரிஸ்டியனோ ரொனால்டோதான். அவர் 512 மில்லியன் ஃபளோவையர்களைக் கொண்டுள்ளார்.
This is Kerala 😳#IndianFootball #Ronaldo #Kerala #football pic.twitter.com/fuEDoQrXVG
— Abhradip Mandal (@MandalAbhradip) December 13, 2022
கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி மொரோக்கோ அணியுடன் மோதி தோல்வியைச் சந்தித்தது. இதனால் கேரளாவில் உள்ள கால்பந்து போட்டியின் ரசிகர்கள் கோபமடைந்து, உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்னர் வைக்கப்பட்ட அவரது பேனரை அடித்து நெறுக்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மூன்றாவது கால் இறுதிப் போட்டியானது நடப்பாண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்பட்ட போட்டிகளில் ஒன்று. இந்த போட்டியில், மொராக்கோவுடன் மோதிய போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. போர்ச்சுகல் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் போர்ச்சுகலின் கேப்டனும் நட்சத்திர நாயகனுமான ரொனால்டோவை உள்நோக்கத்துடன் களமிறக்கவில்லை என்பதே ஆகும்.
ரொனால்டோவிற்கு வாய்ப்பு மறுப்பு:
போட்டியின் 42வது நிமிடத்தில் மொரோக்கோ அணி கோல் அடித்தது. அதன் பின்னர் போட்டியை வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் ரொனால்டோவை 50வது நிமிடத்தில் களமிறக்கியது. அணி தன்னிடம் உள்நோக்கத்துடன் செயல் பட்டாலும், களமிறங்கியது முதல் தனது உலகக்கோப்பைக் கனவு, ஒட்டுமொத்த போர்ச்சுகலின் பெரும் கனவை மனதில் கொண்டு விளையாடினார்.
ஆனால், பெரும் லட்சியத்துடன் விளையாடியவருக்கு பலன் கிடைக்கவில்லை. மொராக்கோ அணியும் தனது உச்சபட்ச ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரொனால்டோவை சுற்றி வளைத்து தடுத்துக்கொண்டே இருந்தது. இதனால் போட்டியின் முடிவு மொராக்கோவுக்கு சாதகமாக மாறியது. போட்டியில் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் உலக்கோப்பை கனவையும் கைவிடவேண்டிய நிலைக்கு ரொனால்டோ ஆளானார். போர்ச்சுகல் அணி ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாத நிலையில், உலகக்கோப்பையை வென்று கொடுப்பேன் என சபதம் ஏற்றார் ரொனால்டோ மைதானத்திலேயே கதறி அழுதார்.
பயிற்சியாளரே முழு காரணம்
கால்பந்து போட்டியைப் பொறுத்தமட்டில் பயிற்சியாளர் முடிவுதான் செயல்படுத்தப்படும். அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ், லீக் சுற்றில் தென்கொரியாவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்த போட்டியில் ரொனால்டோவை பாதியில் வெளியேற்றி மாற்று வீரரை களமிறக்கினார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து ரொனால்டோவை மூன்று போட்டிகளில் அவமானப்படுத்தும் வகையில் நடத்திய பயிற்சியாளரின் உள்நோக்கம், போர்ச்சுகலின் உலகக்கோப்பை கனவை எட்டமுடியாமல் செய்துள்ளது. 37 வயதான ரொனால்டோவுக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை என்பதால் அடுத்த உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், தன்னுடைய உலகக்கோப்பை கனவை கத்தாரில் விட்ட கண்ணீரில் கரைத்துவிட்டார் என்றே கூறவேண்டும்.
ஆனால் இவையெல்லம் வெட்ட வெளிச்சமாக தெரிந்த பின்னரும் கேரளாவில் நடந்துள்ள சம்பவம் ரொனால்டோ ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய்யுள்ளது.