Vedaant Madhavan: பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்..! அம்மாடியோவ் இத்தனை தங்கமா?
இளைஞர்களுக்கான கேலோ இந்தியா தொடரில் நடிகர் மாதவனின் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
மாதவன் பெருமிதம்:
இளைஞர்களுக்கான கேலோ இந்தியா தொடரில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் போட்டியில் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதுதொடர்பான நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடவுளின் ஆசிர்வாதத்தால் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் பிரிவுகளில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதோடு கலப்பு பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வேதாந்த் பெற்று அசத்தியுள்ளார்.
VERY grateful & humbled by the performances of @fernandes_apeksha ( 6 golds,1 silver,PB $ records)& @VedaantMadhavan (5golds &2 silver).Thank you @ansadxb & Pradeep sir for the unwavering efforts & @ChouhanShivraj & @ianuragthakur for the brilliant #KheloIndiaInMP. So proud pic.twitter.com/ZIz4XAeuwN
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 12, 2023
மகாராஷ்டிரா சம்பியன்:
மத்தியபிரதேசத்தில் 5-வது கேலோ இந்தியா யூத் விளையாட்டுகள், ஜனவரி 30ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி வரையில் 8 இடங்களில் நடைபெற்றது. 27 வகையான விளையாட்டுகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் சார்பில் 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுதினர். அதன் முடிவில், மகாராஷ்டிரா அணி முதலிடம் பிடித்துள்ளது. அதில் 56 தங்கம், 55 வெள்ளி மற்றும் 50 வெண்கலம் என மொத்தம், 161 பதக்கங்கள் அடங்கும். இந்த அணிக்காக தான் நடிகர் மாதவனின் மகன் வேதாந்தும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகளில் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்பை மகாராஷ்டிரா அணி கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாகும்.
பதக்கப்பட்டியல்:
- மகாராஷ்டிரா - 56 தங்கம், 55 வெள்ளி, 50 வெண்கலம், மொத்தம் 161 பதக்கங்கள்
- ஹரியானா - 41 தங்கம், 32 வெள்ளி, 55 வெண்கலம், மொத்தம் 128 பதக்கங்கள்
- மத்திய பிரதேசம் - 39 தங்கம், 30 வெள்ளி, 27 வெண்கலம், மொத்தம் 96 பதக்கங்கள்
- ராஜஸ்தான் - 19 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம், மொத்தம் 48 பதக்கங்கள்
- டெல்லி - 16 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம், மொத்தம் 64 பதக்கங்கள்
- கேரளா - 15 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்கள்
- மணிப்பூர் - 13 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம், மொத்தம் 34 பதக்கங்கள்
- தமிழகம் - 12 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கங்கள்
- ஒடிசா - 11 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்கள்
- பஞ்சாப் - 11 தங்கம், 7 வெள்ளி, 15 வெண்கலம், மொத்தம் 33 பதக்கங்கள்
வேதாந்த் மாதவன்:
நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்டுள்ள தனது மகனை நடிகர் மாதவன் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். வேதாந்த் குறித்து பல இடங்களில் பெருமையாக குறிப்பிட்டுள்ள மாதவன், தனது மகன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராவதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக குடும்பத்துடன் துபாயில் குடியேறியுள்ளார். டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது உள்ளிட்ட வெற்றிகளின் மூலம், அவ்வப்போது வேதாந்த் பெயர் செய்திகளில் இடம்பெறுவது தொடர்கதையாகி உள்ளது.