Pro Kabbaddi: களமிறங்கிய 5 ஆண்டுகளில் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற தமிழ் தலைவாஸ்; ரசிகர்கள் உற்சாகம்.!
Pro Kabbaddi: ப்ரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Pro Kabbaddi: ப்ரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பலமான யுபி யோதாஸ் அணியை 43 - 28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி முன்னேறியுள்ளது.
2017ஆம் ஆண்டு ப்ரோ கபடி லீக் போட்டியில் அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி கடந்த 4 ஆண்டுகளாக லீக் சுற்றுடனே வெளியேறி வந்தது. ப்ரோ கபடி லீக் போட்டியின் 9வது சீசனில் விளையாடிவரும் தமிழ் தலைவாஸ் அணி இம்முறை லீக் சுற்றில் இருந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கும் தமிழ் தலைவாஸ் ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தினை அளித்துள்ளது.
View this post on Instagram
முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதை அணியின் வீரர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதில் அணியின் வீரர்கள் நடிகர் விஜய் படத்தின் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி கொண்டாடியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்த சீசனில் மொத்தம் 21 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 10 போட்டிகளில் வென்றும், 7 போட்டிகளில் வெற்றியை இழந்தும், 4 போட்டிகளில் சமனும் செய்துள்ளது. இதனால் 66 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு இறுதி அணியாக தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே, ஜெய்ப்பூர், புனே, பெங்களூரு, உத்திர பிரதேச அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.