Pro Kabaddi Season 9 Final: இறுதி வரை விறுவிறு..! 7 ஆண்டுகள் காத்திருப்பு..! சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜெய்ப்பூர்..!
Pro Kabaddi Season 9 Final: ப்ரோ கபடி லீக்கின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
![Pro Kabaddi Season 9 Final: இறுதி வரை விறுவிறு..! 7 ஆண்டுகள் காத்திருப்பு..! சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜெய்ப்பூர்..! Pro Kabaddi Season 9 Final: Jaipur Pink Panthers Won Puneri Paltans in Final 31 - 29 Points Pro Kabaddi Season 9 Final: இறுதி வரை விறுவிறு..! 7 ஆண்டுகள் காத்திருப்பு..! சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜெய்ப்பூர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/32d4db06dd3aaeade65efba38758c3291671290617601224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Pro Kabaddi Season 9 Final: ப்ரோ கபடி லீக் போட்டியின் 9வது சீசனில் விளையாடிவரும் புனேரி பல்டன் அணி மற்றும் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மோதிக்கொண்டன. இதில் அணி சிறப்பாக விளையாடி, ப்ரோ கபடியின் 9வது சீசனின் சாம்பியன் ஆகியுள்ளது.
சர்தார் வல்லபாய் பட்டேல் உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த போட்டியைக் காண மைதானம் முழுவதும் கபடி போட்டியின் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. குறிப்பாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவரது குழந்தையுடன் கலந்து கொண்டு ஜெய்ப்பூர் அணியை உற்சாகமூட்டினர். அதேபோல், நடிகர் ரன்பீர் சிங், நடிகை பூஜா ஹெஜ்டே ஆகியோர் கலந்து கொண்டு புனேரி அணியை உற்சாகப்படுத்தி வந்தனர்.
போட்டியின் முதல் பாதியின் தொடக்கத்தில் இரு அணிகளும் சரிசமான புள்ளிகளுடன் மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டு இருந்தன. அதன் பின்னர், முதல் பாதி ஆட்ட முடிவில் ஜெய்ப்பூர் அணி 14 புள்ளிகளும், புனே அணி 12 புள்ளிகள் எடுத்து இருந்தது. இதனால் 2 புள்ளிகள் முன்னிலையுடன் களம் இறங்கிய ஜெய்ப்பூர் அணி இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் புனேரி அணியை ஆல் -அவு ட்செய்தது.
View this post on Instagram
ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து ஆட்டம் புனேரி அணியின் பக்கம் சென்றது, ஆனால், மிகவும் பரபரப்பான தருணத்தில் ஜெய்ப்பூர் அணியினர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி மீண்டு வந்தனர். போட்டியின் கடைசி 10 நிமிடங்களில் ஜெய்ப்பூர் அணி 25 புள்ளிகளும் புனேரி அணி 21 புள்ளிகளும் எடுத்து இருந்தது.
அதன்பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் தொடர்ந்து ஜெய்ப்பூர் அணியின் ஆதிக்கமே நிறைந்து இருந்தது. ஆனால் போட்டியின் கடைசி 1 நிமிடத்தில் 30-27 என இருந்தது. போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியது, அதன் பின்னர் போட்டியை 33 - 29 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
மொத்தம் ஜெய்ப்பூர் அணி 13 ரெய்டு பாண்டுகளும். 15 டேக்கிள் பாய்ண்டுகளும், 2 ஆல் அவுட் பாய்ண்டுகளும், 3 எக்ஸ்ட்ரா பாய்ண்டுகளும் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)