Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 17 புள்ளிகள் வித்தியாசம்; பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இமாலய வெற்றி
Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்த போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது.
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணி கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் புள்ளிப்பட்டியலில் 11-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகளுடன் இருப்பதுடன் எதிர்மறை புள்ளிகளின் எண்ணிக்கையும் மைனஸ் 14ஆக குறைந்துள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாக மாறும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.
பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்?
பெங்களூரு புல்ஸ் அணி இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல், 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அந்த அணி 37 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு புல்ஸ் அணி கடைசியாக தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் விளையாடியது. இந்த போட்டியில் 42-26 என்ற புள்ளிகள் அடிப்படையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
முன்னதாக, பெங்களூரு புல்ஸ் அணி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ் அணி. இச்சூழலில் தான் நாளை நடைபெறும் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: புள்ளிப்பட்டியலில் கெத்து காட்டும் தலைவாஸ்
புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டு பாய்ண்டுகள் வித்தியாசத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் + 3புள்ளிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது.
Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 17 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி
17 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றுள்ளது. தலைவாஸ் அணி 45 புள்ளிகளும் பெங்களூரு புல்ஸ் 28 புள்ளிகளும் எடுத்துள்ளது.
Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 45 புள்ளிகள் எடுத்தது தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி 45 புள்ளிகள் எடுத்தது.
Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 10 ரெய்டு புள்ளிகள் எட்டிய அஜங்கியா பவார்
இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர் அஜங்கியா பவார் 10 புள்ளிகள் எடுத்து அசத்தியுள்ளார்.
Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 41 புள்ளிகளை எட்டிய தலைவாஸ்
தலைவாஸ் அணி தனது 41வது புள்ளியை எட்டியுள்ளது.