Pro Kabaddi 2023: இறுதிவரை போராடிய தமிழ் தலைவாஸ்... வெற்றி வாகை சூடிய குஜராத் ஜெயன்ட்ஸ்!
தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.
இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 30-33 என்ற கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயன்ட்ஸ்:
In comes Narender 👉 defenders surrender 😌#ProKabaddi #ProKabaddiLeague #PKL #PKLSeason10 #HarSaansMeinKabaddi #CHEvGG #TamilThalaivas #GujaratGiants pic.twitter.com/Nuqq3hDwTs
— ProKabaddi (@ProKabaddi) December 27, 2023
முன்னதாக, நடப்பு தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11 புள்ளிகளுடன் 11வது இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது. சென்னையில் அந்த அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைப் பெற்றது. மறுபுறம், குஜராத் ஜெயண்ட்ஸ் 5 ஆட்டங்களில் வெற்றி, 3 தோல்வியுடன் 4 வது இடத்தில் இருக்கிறது.
டிசம்பர் 25 அன்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் 29-42 என தோல்வியடைந்தது. அதேவேளையில், டிசம்பர் 23 அன்று நடந்த கடைசி ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் 38-30 என உ.பி யோதாஸை வீழ்த்தியது. இச்சூழலில் தான் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை குஜராத் அணி வீழ்த்தி இருக்கிறது.
தமிழ் தலைவாஸ்:
Raid points: 19
Super raids : 0
Tackle points: 10
All out points: 0
Extra points: 1
குஜராத் ஜெயன்ட்ஸ்:
Raid points: 18
Super raids : 1
Tackle points: 13
All out points: 2
Extra points: 0
மேலும் படிக்க: EXCLUSIVE: கபடி வீரர்களில் நிறைய பேர் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்... தமிழ் தலைவாஸ் வீரர்கள் சொன்ன விஷயம்..
மேலும் படிக்க: IND vs SA 1st Test: ரஹானே இருந்திருந்தால்...உண்மையை போட்டுடைத்த சுனில் கவாஸ்கர்...என்ன சொன்னார் தெரியுமா?