Pro Kabaddi: பரபரப்பான ஆட்டம்: ப்ரோ கபடியில் டேபிள் டாப்பராக நிலைநிறுத்திக்கொண்ட பெங்களூரு அணி
Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் பெங்களூரு அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகவும் பலமான அணியான புனே அணியை வீழ்த்தி, டேபிள் டாப்பராக உள்ளது.
Pro Kabaddi 2022: இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த வெள்ளிக் கிழமை (07/10/2022) தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கிய இந்தத் தொடர் நேற்று முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று மூன்று போட்டிகள் நடைபெற்றன. மாலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பாட்னா ப்ரேய்ட்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பரபப்பாக தொடங்கிய இந்த போட்டியில் 35 - 30 எனும் புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜெய்ப்பூர் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பாட்னா அணி இன்னும் வெற்றிக் கணக்கினை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றய நாளின் இரண்டாவது போட்டியாக இரவு 8.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் களம் இறங்கின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பெங்கால் வாரியர்ஸ் அணி 45 - 25 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியினை துவம்சம் செய்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் அணி இன்னும் வெற்றிக் கணக்கினை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
நேற்று நடந்த கடைசி போட்டி இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் புனேரி பல்டன் அணியும் பெங்களூரு புல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரை மிகவும் பரபரப்பாகவே இருந்த போட்டியில் யார் வெல்வார் என்பதே கணிக்க முடியாமல் இருந்தது. போட்டியின் இறுதி கட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 41 - 39 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தியது. இந்த சீசனின் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பெங்களூரு அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டேபிள் டாப்பராக உள்ளது.