Praggnanadha: செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் - மாஸ் காட்டிய பிரக்ஞானந்தா! இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் அரையிறுதியில் நெதர்லாந்து வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலகின் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று ஆடி வரும் செசபிள் மாஸ்டர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பங்கேற்று ஆடி வருகிறார். இவர் ஏற்கனவே உலகின் தலைசிறந்த செஸ் வீரரான கார்ல்சனை தோற்கடித்திருந்தார்.
Giri cracks again at the end and Praggnanandhaa is through to the final against Ding Liren! https://t.co/P3YnqjvmpD #ChessChamps #ChessableMasters pic.twitter.com/6m2VtyR2bg
— chess24.com (@chess24com) May 24, 2022
இந்த நிலையில், அவர் அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த கிரி அனிசுடன் இன்று விளையாடினர். ஆன்லைன் மூலம் நடைபெற்றும் வரும் இந்த தொடரில் கிரி அனிசை, பிரக்ஞானந்தா திறம்பட சமாளித்தார். இதனால், அவருக்கு ஈடு கொடுக்க முடியாத கிரி அனிஸ் தோல்வியை தழுவினார். இந்த வெற்றி மூலம் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் உலகின் தலைசிறந்த செஸ் வீரரும், தரவரிசைப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவருமாகிய டிங் லிரேனை எதிர்கொள்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்