Tokyo Olympics: 3000 மீட்டர் ஸ்டீப்புள்சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த அவினாஷ் சேபிள்
டோக்கியோ ஒலிம்பிக் 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் தடகள போட்டியில் இந்தியா சார்பில் அவினாஷ் சேபிள் பங்கேற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று முதல் தடகள போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளான இன்று 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். அதில் இரண்டாவது ஹீட்ஸ் பிரிவில் இவர் ஓடினார். தொடக்கத்தில் சற்று சிறப்பாக ஓடிய அவினாஷ் சேபிள் இறுதி வரை அதை தக்க வைக்க முயற்சி செய்தார். இறுதியில் பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
🚨 AVINASH SABLE SETS A NEW NATIONAL RECORD!
— India 🇮🇳 at #Tokyo2020 (@IndiansportFeed) July 30, 2021
India’s Avinash Sable breaks his own national record (8:20:20) in men’s 3000m steeplechase by setting a new national record of 8:18:12.
He finishes 7th in the heat. (Top-3 qualify to finals) #IndiaAtTokyo2020 #Tokyo2020 pic.twitter.com/uFBmYgIpkM
எனினும் தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் அவினாஷ் சேபிள் 7ஆவது இடத்தை பிடித்தார். ஹீட்ஸ் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அடுத்ததாக அதிவேகமாக ஓடிய 6 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் அவினாஷ் சேபிளின் நேரம் 4ஆவது இடத்திற்கு மேல் வந்தவர்களில் முதல் 6 இடங்களுக்கு அதிகமாக இருந்ததால் அவரால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. தன்னுடைய தேசிய சாதனையை உடைத்த பெருமையுடன் அவினாஷ் சேபிள் இந்தப் பிரிவு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.
Heartbreak for Avinash Sable as even his National Record 8:18.12 is not enough to qualify for Final
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
Overall he finished 13th amongst 44 athletes. Total 15 (Top 3 from 3 Heats + 6 best athletes qualify for Final)
Proud of your effort Avinash #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/iRwqssDjbT
அடுத்ததாக இன்று காலை நடைபெறும் மகளிர் 100 மீட்டர் முதல் சுற்றில் இந்தியாவின் டூட்டி சந்த் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை காலை 8.45 மணிக்கு நடைபெற உள்ளது. ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பங்கேற்க உள்ளார். இந்த முதல் சுற்று போட்டி காலை 8.27 மணிக்கு நடைபெற்ற உள்ளது. இன்று மாலை 4.42 மணிக்கு நடைபெற உள்ள 4*400 மீட்டர் கலப்பு பிரிவு ரிலேவில் இந்தியாவின் சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் ஆண்டனி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க:ஒலிம்பிக் மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை : தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதிபெற்று அசத்தல் !