மேலும் அறிய

Ban Vs Afg World Cup 2023: உலகக் கோப்பையில் ஆசிய அணிகள் பலப்பரீட்சை: வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ODI WC Bang Vs Afg: தர்மசாலாவில் இன்று நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் மூன்றாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

ODI WC Ban Vs Afg: ஐசிசி உலகக் கோப்பையின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதல்:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி உற்சாகமாக தொடங்கியது.  நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில் இன்று உலகக் கோப்பையில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, காலை 10.30 மணியளவில் தர்மசாலாவில் நடைபெறும் முதல் போட்டியில், ஆசியாவை சேர்ந்த வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு, வங்கதேசத்தை பழிதீர்க்க ஆப்கானிஸ்தான் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

பலம் & பலவீனங்கள்:

ஆப்கானிஸ்தான் அணி வழக்கம்போல் தனது வெற்றிக்கு சுழற்பந்து வீச்சையே பெரும்பாலும் நம்பியுள்ளது. அதேநேரம், அணியின் முன்கள வீரர்களின் அதிரடியான ஆட்டமும், நல்ல ஃபார்மும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தால், அணியை மீட்பதற்கான சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அணியின் பின்னடைவாக கருதப்படுகிறது. வங்கதேச அணியை பொருத்தவரையில் தொடக்க வீரர் தமிம் இக்பால் விளையாடாதது முதல் பின்னடைவாகும். இருப்பினும் கேப்டன் ஷகிப் அல் ஹசன், துணை கேப்டன் லிட்டன் தாஸ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன், ஹிரிடோய் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் முகமதுல்லா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பது கூடுதல் வலுவாக உள்ளது. வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவிச்சு என இரண்டு யூனிட்டும் சரியான கலவையில் வங்கதேசத்திற்கு அமைந்துள்ளது.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 9 முறை வங்கதேச அணியும், 6 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானம் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. மீடியம் பேசர்கள் விக்கெட் வேட்டை நடத்த ஏதுவாக இருக்கும். இதுவரை அங்கு நான்கு சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. வானிலையை பொருத்தவரையில் தர்மசாலாவில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 30° C ஆக இருக்கும், ஆனால் மாலையில் 22° C ஆகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

உத்தேச அணிகள்:

வங்கதேசம்:

மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன்/நாசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, நஜிபுல்லா சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

வெற்றி வாய்ப்பு: வங்கதேச அணி வெற்றி பெறவே கூடுதல் வாய்ப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget