மேலும் அறிய

Norway Chess 2022: 6 நாட்களில் 2 முறை உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் அசத்தல் !

6 நாட்களில் இரண்டு முறை உலக சாம்பியன் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த வீழ்த்தி அசத்தியுள்ளார்.

செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார்.  நார்வேயில் நடைபெற்று வரும் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். 

 

இந்தத் தொடரின் 5வது சுற்றில் நேற்று உலக சாம்பியன் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார். அந்தப் போட்டியில் க்ளாசிக்கல் கேம் பிரிவில் இருவரும் டிரா செய்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அர்மகேடான் பிரிவில் உலக சாம்பியன் மேகன்ஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார். அத்துடன் 5 சுற்றுகளின் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தினார். 

 

மேலும் ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த 31ஆம் தேதி இதே தொடரில் கார்ல்சனை ஆனந்த் வீழ்த்தியிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு கடைசியாக  2017ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனை வீழ்த்தியிருந்தார். 

உலக தரவரிசையில் டாப் 10ல் ஆனந்த்:

கடந்த சில சர்வதேச செஸ் தொடரில்களில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக நார்வே செஸ் தொடரில் பெற்ற இரண்டு வெற்றிகளின் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார். அவர்  2760 புள்ளிகளுடன் சர்வதேச தரவரிசையில் 9வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் டாப் 10 இடத்திற்குள் விஸ்வநாதன் ஆனந்த வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

ஏற்கெனவே உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டு முறை தோற்கடித்துள்ளார். முதலில் அவர் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரிலும் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் தோற்கடித்திருந்தார். பிரக்ஞானந்தா செசசிபிள் மாஸ்டர் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Embed widget