மேலும் அறிய
Advertisement
தோனிக்கு விதிக்கப்பட்டது ரூ.12 லட்சம் அபராதம்… ஏன் தெரியுமா?
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி மெதுவாக பந்துவீசியதாக கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. இதையடுத்து, விளையாடிய டெல்லி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸை 90 நிமிடங்களில் முடிக்கவேண்டும் என்பது விதி. ஆனால், டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி பந்துவீசுவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டது.
இந்நிலையில், மெதுவாக பந்துவீசியதற்காக அணியின் கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion