Pakistan Team: பாகிஸ்தான் வீரர்களை பாசத்துடன் வரவேற்ற சென்னை...11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அன்பு மழை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.
Pakistan Team: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை:
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த 5ம் தேதி தொடங்கி இந்தியாவின் 10 நகரங்களில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அதிரடியான பேட்டிங், கடைசி ஓவர் த்ரில்லிங், எதிர்பாராத வெற்றி என பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நாளை போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமான மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
11 ஆண்டுக்கு பிறகு சென்னை மண்ணில் பாகிஸ்தான் வீரர்கள்:
சில மணி நேரங்களுக்கு முன்பு, சென்னை விமான நிலையம் வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து சென்னை வரும்போது சென்னை ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி அவர்களை வரவேற்றனர். இதையடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சொகுசு பேருந்து மூலம் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியும் சென்னை வர உள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி சென்னை வந்துள்ளது. கடைசியாக, 2012ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடியது.
அதன்பிறகு, 11 ஆண்டுகள் கழித்து தற்போது உலகக் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது பாகிஸ்தான் அணி. அதாவது, நாளை ஆப்கானிஸ்தான் அணியுடனும், வரும் 27ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்தும் விளையாட உள்ளது பாகிஸ்தான் அணி. இதற்கு முன் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் உடன் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்க உள்ளது.
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், உசாமா மிர், முகமது நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், முகமது வாசிம் ஜூனியர், ஹசன் அலி ஆகியோர் உள்ளனர்.
புள்ளிப்பட்டியல் விவரம்:
அணிகள் | போட்டிகள் | வெற்றிகள் | தோல்வி | புள்ளிகள் |
நியூசிலாந்து | 4 | 4 | 0 | 8 |
இந்தியா | 4 | 4 | 0 | 8 |
தென்னாப்ரிக்கா | 3 | 2 | 1 | 4 |
ஆஸ்திரேலியா | 4 | 2 | 2 | 4 |
பாகிஸ்தான் | 4 | 2 | 2 | 4 |
இங்கிலாந்து | 3 | 1 | 2 | 2 |
வங்கதேசம் | 4 | 1 | 3 | 2 |
நெதர்லாந்து | 3 | 1 | 2 | 2 |
ஆப்கானிஸ்தான் | 4 | 1 | 3 | 2 |
இலங்கை | 3 | 0 | 3 | 0 |
மேலும் படிக்க
Ned vs SL Innings Highlights: இறுதியில் வெளுத்து வாங்கிய நெதர்லாந்து - இலங்கைக்கு 263 ரன்கள் இலக்கு