World Cup 2023 Points Table: பதறும் அணிகள்.. மேலே ஏறி வரும் ஆஸ்திரேலியா - உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் டாப் 4 யாருக்கு?
World Cup 2023 Points Table: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி, புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.
World Cup 2023 Points Table: உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சகமாக நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சில அணிகள் தடுமாறினாலும், சில அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு, பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியையும், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா படுதோல்வி:
பெங்களூரு சின்ன்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 367 ரன்களை குவித்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 305 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புள்ளிப்பட்டியல் விவரம்:
அணிகள் | போட்டிகள் | வெற்றிகள் | தோல்வி | புள்ளிகள் |
நியூசிலாந்து | 4 | 4 | 0 | 8 |
இந்தியா | 4 | 4 | 0 | 8 |
தென்னாப்ரிக்கா | 3 | 2 | 1 | 4 |
ஆஸ்திரேலியா | 4 | 2 | 2 | 4 |
பாகிஸ்தான் | 4 | 2 | 2 | 4 |
இங்கிலாந்து | 3 | 1 | 2 | 2 |
வங்கதேசம் | 4 | 1 | 3 | 2 |
நெதர்லாந்து | 3 | 1 | 2 | 2 |
ஆப்கானிஸ்தான் | 4 | 1 | 3 | 2 |
இலங்கை | 3 | 0 | 3 | 0 |
மீண்டு(ம்) வரும் ஆஸ்திரேலியா:
ஒருநாள் உலகக் கோப்பையை 5 முறை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு, நடப்பு உலகக் கோப்பையின் ஆரம்பம் மிகவும் மோசமாகவே அமைந்தது. வழக்கம்போல் கண்டிப்பாக அரையிறுதிக்கு தகுதி பெறும் என கருதப்படும் இந்த அணி, முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வியுற்றது. அதைதொடர்ந்து நடைபெற்ற தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும், வரலாறு காணாத அளவில் படுதோல்வ் அடைந்தது. இதனால், புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கத்துக்குட்டிகளான நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட, புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி பின்தங்கி இருந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில், அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 4 புள்ளிகளுடன் டாப் 4 இடங்களுக்கு முன்னேறியுள்ளது. அதாவது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை எட்டியுள்ளது. இதனால், நடப்பு உலகக் கோப்பை இனிமேல் தான் சூடுபிடிக்க தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இன்றைய போட்டி:
இதனிடையே, இன்று நெதர்லாந்து Vs இலங்கை மற்றும் தென்னாப்ரிக்கா Vs இங்கிலாந்து இடையே என இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி புள்ளிப்பட்டியலில் எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரம், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறும்.