Asia Cup Table Tennis 2022: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா..
தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று தொடங்கிய ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார்.
தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று தொடங்கிய ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார்.
இவர் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற சீன வீராங்கனை வாங் யிடியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 44ஆவது இடத்தில் உள்ள மனிகா பத்ரா, 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
MANIKA UPSETS WR 7 CHEN XINGTONG 🏓
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) November 17, 2022
Manika Batra(#44) upsets 4th seed 🇨🇳Chen Xingtong (#7) in 7 sets thriller(4-3) in R16 of TT Asia Cup!
One of the biggest wins in Manika's Career!
Set Score:8-11,11-9,11-6,11-6,9-11,8-11,11-9
QF vs winner of 🇹🇭Sawettabut vs 🇹🇼Chen pic.twitter.com/13ORZfY9wX
இதன்மூலம் மனிகா காலிறுதியில் அடியெடுத்து வைத்தார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இருந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.